பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 ஜி பாரதிதாசன் உவமைநயம் தேகத்துக்கிடமான ஏதோ ஒன்று இருந்து இப்படி யெல்லாம் ஆட்டி வைப்பதாகச் சொல்வதும் வாழ்க்கைக்கு வழிகாட்டா. இந்த அறியாமை களைக் கண்டு நவயுக எழுச்சியின் வீர முரசான புரட்சிக் கவிஞர் சொல்-அனல் சிதறினால் அது யார் தவறு? குள்ளநரிச் சமூகத்தின் தவறு. சிந்திக்கும் திறனிருந்தும் சிந்தனை செய்யாத மக்களின் குற்றம். நடவுசெய்த தோழர் கூலி நாலனாவை ஏற்பதும் உடலுழைப்பில்லாத செல்வர் 瓷_、 ஆண்டுலாவலும் கடவுளாணை என்றுரைத்த கயவர் கூட்டமீதிலே கடவுள் என்ற கட்டறுத்துக் தொழிலாளாரை ஏவுவோம்! அந்த நிலை ஏற்பட்டால் யார் சூழ்ச்சியும் எதிர்த்து நிற்க முடியாது. ஏன்? உழைப்பை நம்பி உழைப்பால் வாழ்பவர்கள் கூட்டம் கடல் போன் றது. சுரண்டுவோர் தொகையோ சிறிது. கடல் மேல் நீந்தும்தோணி அது. கடலின் கொந்தளிப்பு ஏற்பட்டால் ஒடம் சமாளித்து நிற்க முடியுமா? முடியாதுதானே! ஊரிலேனும் நாட்டிலேனும் உலகிலேனும் எண்ணினால் நீர் நிறைந்த கடலையொக்கும் நேர் உழைப்பவர் தொகை: நீர் மிதந்த ஒடமொக்கும் நிறை முதல் கொள வோர் தொகை