பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4ே ஆ பாரதிதாசன் உவமை நயம் பொத்தல் இலைக் கலமானார் ஏழைமக்கள் புனல் நிறைந்த தோட்டியைப்போல் ஆனார் செல்வர். பத்திரிகைகளைப்பற்றிய பாடலில் ஒரு உவமை உள்ளது. காடுமேடெல்லாம் அலைந்து இனிய பழம் சேர்ப்பவர்கள் போல் அறிஞர் நினைவுக் கணிகள் சேர்க்கிறார்கள். அவற்றை. வாங்கி எல்லோருக்கும் கிடைக்கும்படி சந்தையில் விலை கடறுகிறது பத்திரிகை. கரும்புதர் விலக்கிச் சென்று களாப்பழம் சேர்ப்பார்போலே நெடும்புவி மக்கட் கான நினைப்பினிற் சென்று நெஞ்சிற் படும் பல நுணுக்கம் சேர்ப்பார் படித்தவர்' பொதுமக்கள் எதை விரும்புவார்கள், எத். தகைய சிந்தனைகள் பயனுள்ளவை என்றெல் லாம் ஒர்ந்து சிந்தித்துச் சிந்தித்து பல நயங், களைக் கண்டுபிடிக்கிறார்கள் படித்தவர்கள். அவற்றையெல்லாம் கொடும் என அள்ளி உன் தாள் கொண்டார்க்குக் கொண்டுபோவாய்! இனிய உவமை இல்லையா இது?