பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டியன் பரிசு 'எளிய நடை ஒன்றாலேயே தமிழன் மேன் மையை தமிழன் பயனை-தமிழர்க்கு ஆக்கமுடி யும் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை' எனும் கொள்கையுடைய கவிஞர் பாரதிதாசன் 'தொடக்கப் படிப்பினரும் புரிந்து கொள்ளும்படி யாக இயற்றியது பாண்டியன் பரிசு' என்ற சிறு காவியம். அதில் உள்ள உவமை நயங்களை மட்டும் இங்கு கவனிக்கலாம். நெடுங்கோட்டை மதிலின் மீது கைக் காட்டி வா பகையே’ என அழைக்கும் புதுமைபோல் கொடி பறக்கும்' கதிர் நாட்டுக்குள் பகைப்படை புகுந்தது. கடும் போர் எழுந்தது. பனைமரங்கள் இடிவீழ்க் கிழிந்து வீழும் பான்மைபோல் இருதிறத்தும் மற வர் வீழ்ந்தார். எதிரியின் படைகள் அரண் மனைக்குள் எங்கும் பரவ ஆரம்பித்தது. எப்படி? பொங்கிவரும் வெள்ளம் மடைதோறும் பாய் வதைப் போல் ஒடிச் சூழ்ந்தது. விரி நீர் போய் மடை தோறும் பாய்வதைப்போல் சூழலுற்றார்: பொன்னிருப்புச் சாலைக்குள்ளும் தொகுநெற் களஞ்சியத்தும் எவ்விடத்தும்! இடுகாட்டில் நரிக்கூட்டம் உலாவல் போலே எவ்விடத்தும் அரண்மனையில் வேழ நாட்டின் படைவீரர் உலாவினார். எலிகள் ஓடிப் ப. உ. - 5