பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆ. பாரதிதாசன் உவமை நயம ஒடிய இடத்துக்கே மீண்டும் போய், சுற்றிச் சுற்றி ஒடுகிறார்கள், கவலை எருதுகள் போல! கவனோடும் கல்லைப் போல் விரைந் தாரேனும் எவ்விடத்தில் பே வ தென்று கருதவில்லை கவலை எருதுகள் போல் மக்கள் யாரும் கால் கடுக்க நகர் சுற்றிச் சுற்றி வந்தார்" போர் செய்தல் வீரத்தமிழன் பண்பு. நேர்மை யான முறையில் போரிடுவதை அவன் வெறுப்ப தில்லை. தேனை வண்டு வெறுக்காது. தண் னரை மீன் வெறுப்பதில்லை. அதுபோல்தான். தேன் வெறுக்கும் வண்டுண்டோ நல் அறப்போர் ச் செயல் வெதுக்கும் தமிழருண்டோ? தெண்ணிர் தன்னை மீன் வெறுத்த துண்டோ? ஒருத்தி தனது கணவனின் குணம் பிடிக்காது வெறுத்து ஒதுக்கிவிட்டாள். பல ஆண்டுகளாகி விட்டன. இருவரும் முதியோராயினர், மன உறுதி தளரவில்லை. ஆகவே இடைக்காலத்தில் ஒரு வரை ஒருவர் காணவில்லை. முடிவில் இருவரும் இனம் தெரிய மாற்றுருவில் போரிட்டுக் காயம் ஏற்று வீழ்ந்துகிடந்தனர். நோவைப் பொறாத அவள் அவ்வேதனையிடையேயும் உச்சரித்தது அத்தான்’ என்ற இனிய சொல்லைத்தான். இது இயல்புதானே. காயம் படும் பிள்ளை சோகமாய் கதறும்போது முதலில் அம்மா’ என்றுதானே கூவுகிறது, அன்பின் உருவை எண்ணி, அது போல்தான் அவள் செயலும். தனக்குந்தன் கணவனுக்கும் இடையில் வாய்ந்த தடை, பிரிவு கசப்பனைத்தும் பல்லாண்டாகப்