பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைப் பாடல்கள் - 105

வருகஎன்றுரைத்தாள்-கண்ணால் வரவேற்று நின்றாள். பாரி இருகையால் தழுவப் போனான் "இரும்” என்றாள். “என்ன” என்றான். ஒருமனப் பட்டு, வாழ்க்கை ஒப்பந்தம் செய்து கொள்வோம் பருகுவோம் பிறகு காதற் பழச்சாற்றை என்று சொன்னாள்.

உம்மதம் என்ன என்றாள். உம்பெயர் என்ன என்றாள்: “எம்மதம் ஆனால் என்ன, நான்ஒரு முசிலிம்" என்றான். செம்மைசேர் புனை பெயர்தான்் பாரினன்றுரைத்தான்் செம்மல். "இம்மியும் நமது வாழ்வில் ஒற்றுமை இராதே" என்றாள்.

என்மதம் மயிலே உன்னை வரவேற்க மறுப்பதில்லை. கன்னலின் உதட்டை என்பால் காட்டுக என்றான் காளை. நன்மனத் தீர், உமக்கு நான் வேண்டுமாயின், நீவிர் உம்மதம் துறக்க வேண்டும் உள்ளத்தும், வெளிப் புறத்தும்!