பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 - பாரதிதாசன்

என்றனள். இதனைக் கேட்டாள். திடுக்கிட்டான். இயம்பு கின்றான்; என்மதம் இசுலாம். ஆம் ஆம், எனினும்நான் திராவிடன்தான்். என்றனன். மங்கை நல்லாள், இதுகேட்டாள். சிரித்துச் சொல்வாள்; மன்னிய திராவிடர்க்கு மதமில்லை, சாதி யில்லை.

தளைமதம் விடுக.நீவிர் தனிவிடுதலைமேற் கொள்க. களையினை நெஞ்சகத்துக் கழனியில் வளர்த்தல் வேண்டாம் இளமையின் பயனும் வாழ்வின் இன்பமும் மதத்தில் இல்லை விளைந்திட்ட தீமை எல்லாம் மதவெறி விளைத்த தென்றாள்!

நினைவினில் ஆழ்ந்தான்். நெஞ்சில் நிறைஇருள் நீங்கப் பெற்றான். தனிப்பெருந்திராவிடத்தைத் தான்்எனக் கண்டான். மானே இனிஒரு மதத்துக் காட்பட் டிரேன்என்றான். தூய்மையான மனத்தினை அவளுக் கீந்தான்். மங்கையும் தன்னைத் தந்தாள்.

- குயில் 1948 Ο Ο Ο