பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 பாரதிதாசன்

என்ற மொழிகள் இவர் காதில் கேட்டவுடன் நன்கு பிரெஞ்சியர்க்கு நாக்குளிர வாழ்துரைத்தார். பின்னர் அமெரிக்கன் பேசுவதைக் கேட்டார்கள். அன்னவன் பேச்சும் அடியில் வருமாறு:

x 欢 ★

நல்ல அமெரிக்கன் நானிலத்தில் வாழ்கின்ற எல்லாரும் நன்றாய் இருக்க நினைத்திடுவான். பொல்லா அமெரிக்கன் பொன்னடைந்து தான்்மட்டும் செல்வனாய் வாழத் தினமும் நினைத்திடுவான். நல்லவனாய் நானிருக்க நாளும் விரும்புகிறேன் சொல்லும் இதுகேட்டதோகையும் குப்பனும், 14O "கொத்தடிமையாகிக் குறைவுபடும் நாட்டுக்கு மெத்ததுணைதேசம் இருந்தொருவன் பேசினான்: இங்கிருந்து கேட்டார் இருவரும் என்னவென்றால்:

★ ★ 丈 'ஓ' என் சகோதரரே ஒன்றுக்கும் அஞ்சாதீர்! நாவலந்தீவு நமைவிட்டுப் போகாது, வாழ்கின்றார் முப்பத்து முக்கோடி மக்கள் என்றால் சூழ்கின்ற பேதமும் அந்தத் தொகையிருக்கும்; ஆகையால் எல்லாரும் அங்கே தனித்தனிதான்். - ஏகமனதாகிஅவர் நம்மை எதிர்ப்பதெங்கே? 15O பேதம் வளர்க்கப் பெரும்பெரும்பு ராணங்கள்! சாதிச்சண்டைவளர்க்கத் தக்கஇதிகாசங்கள்! கட்டிச் சமூகத்தின் கண்ணவித்துத் தாமுண்ணக் கொட்டி அளக்கும் குருக்கள் கணக்கற்றார். தேன் சுரக்கப் பேசிஇந்து தேசத்தைத்தின்னுதற்கு வான்சூரரை விட்டுவந்த பூசுரரும் வாழ்கின்றார். இந்த உளைச்சேற்றை, ஏறாத ஆழத்தை