பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைப் பாடல்கள் 31

ஏழையரைக் கொல்ல எதிரிருந்து பார்த்திருப்போர் பாழான நெஞ்சம் சிலசமயம் பார்த்திரங்கும்!

சித்தம் துடிக்கின்ற சேயின் நிலைமைக்கு சத்தவெறி கொண்டலையும் நால்வருணம் ஏனிரங்கும்?

ரத்தவெறி கொண்டலையும் ராசன்மனம் எனிரங்கும்? அத்தருணம் அந்த அமுதவல்லி ஏதுசொல்வாள்.

'வாளை உருவிவந்து மன்னன் எனதுடலை நாளையே வெட்டி நடுக்கடலில் போடட்டும்,

காளைஉன் கைகள் எனைக் காவாமல் போகட்டும், தாளை அடைந்தஇத் தையல் உள்ளம் மாறாதே!

ஆதரவு காட்டாமல் ஐய எனை விடுத்தால் பாதரட்சை போலுன்றன் பாதம் தொடர்வதன்றி,

வேறு கதியறியேன், வேந்தன் சதுர்வருணம் சீறும்எனில் இந்தஉடல் தீர்ந்தபின்னும் சீறிடுமோ?

ஆரத் தழுவி அடுத்தவினாடிக்குள் உயிர் தீரவரும் எனினும் தேன்போல் வரவேற்பேன்!

அன்றியும்என் காதல் அமுதே'நமதுள்ளம் ஒன்றுபட்ட பின்னர் உயர்வென்னதாழ் வென்ன? நாட்டின் இளவரசி நான் ஒருத்தி ஆதலினால் கோட்டை அரசன்.எனைக் கொல்வதற்குச் சட்டமில்லை!

கோல்வேந்தன் என்காதற் கொற்றவனைக் கொல்லவந்தால் சேல்விழியாள் யான்எனது செல்வாக்கால் காத்திடுவேன்!