பக்கம்:பாரதிதாசன் கவிதைகள்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சை - 64. திராவிட நாட்டுப் பண் மோகனம்) வாழ்க வாழ்கவே வளமார் எமதுதி ராவிடநாடு வாழ்க வாழ்கவே! சூழும் தென்கடல் ஆடும் குமரி தொடரும் வடபால் அடல்சேர் வங்கம் ஆழும் கடல்கள் கிழக்கு மேற்காம் அறிவும் திறலும் செறிந்த நாடு. (தாளம் பண்டைத் தமிழும் தமிழில் மலர்ந்த பண்ணிகர் தெலுங்கு துளுமலை யாளம் கண்டை நிகர்கன் னடமெனும் மொழிகள் கமழக் கலைகள் சிறந்த நாடு. அள்ளும் சுவைசேர் பாட்டும் கூத்தும் அறிவின் விளைவும் ஆர்ந்திடு நாடு வெள்ளப் புனலும் ஊழித் தீயும் வேகச் சீறும் மறவர்கள் நாடு. - ஆதி (வா) (வா) (வா)