பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாலாட்டுப்பாடல்கள்

15


உழவுத் தொழிலின் உயர்வினையும், பாண்டி நாட்டுத் தாலாட்டு தமிழகத்தின் செல்வச் செழிப்பையும் நாகரிகத்தையும் விளக்குகின்றன. இவ்வாறு நடையழகில் செயங்கொண்டானையும், இனிமையில் இளங்கோவையும், கற்பனையில் கம்பனையும், சொல்லாட்சியில் மணி வாசகரையும், நாகரிக விளக்கத்தில் சங்ககாலப் புலவர்களையும் ஒப்புமையாகப் பெற்றுப் பெருமையுடன் விளங்குகிறது தாலாட்டு!

தாயும் தாலாட்டும்

இத்துணைக் கற்பனைச் செறிவும், இலக்கிய நயங்களும் அமைத்துப் பாடுவதால் குழந்தைக்கு என்ன பயன்? தாலாட்டின் முதற்பயன் குழந்தையின் உறக்கமல்லவா? அந்தக் குழந்தைக்குப் புரியாத நிலையில் நாம் நம் திறமையைக் காட்டுவதால் என்ன பயன்? -இவ்வாறு பாமரனுக்கும் புரியும் நடையிலே எழுவதாக் கூறிக்கொண்டு, கடைசியில் தங்களுக்கும் பாமரனுக்கும் புரியாத முறையில் கலப்படத் தமிழில் எழுதி எழுதிக் கெடுத்து, நல்ல தமிழ் நடையை நையாண்டி செய்து வருவோர் கேட்பர், குழந்தைக்கும் புரியும் நடையிலே அல்லவா தாலாட்டிருக்க வேண்டும் என்று கூக்குரலிடுவர். குழந்தையின் மழலைமொழியிலே பாடினாலும் குழந்தைக்குப் புரியப்போவதில்லை. வளரும் குழந்தையுள்ளமும் அதனை விரும்பாது. 'குழந்தை மொழியிலே' தாலாட்டுவதென்றால் குழந்தை அழும்போதும் நாமும் கூடவே அழுதுவிடுவதுதான் முடியக் கூடிய காரியம்!

தமிழ் நூல் வகைகளிலே “தூது" என்பதும் ஒன்று. காதலிரிடையே மனக்கருத்தைப் பரிமாறிக்கொள்ள ‘மான்,