பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19

பாரதிதாசன்


உலகப்புகழ் பெறும்போது உலகம் அவனைப் பாராட்டும். அப்பாராட்டுக்குரிய புலமைச் சொத்தினைச் சேமித்து வைத்தவர் அவனுடைய தாத்தா-குடும்பம் - பரம்பரை என்பதை உணர்கின்ற உள நூல் அறிஞர்கள் பரம்பரையைப் போற்றுகின்றனர். இத் தத்துவம் நமக்கு விளங்கினால் நம் முன்னோர் நமக்குச் சேமித்து வைத்த சொத்து சுகம், பொன்னும் பொருளுமே என்று எண்ணமாட்டோம்; புலமையும் பண்பாடமே என எண்ணிப் போற்றுவோம்.

குழந்தைப் பருவத்தில் இப்பதிவு பசுமரத்தாணி போற் பதியும். அதுவும் பாதி உறக்கத்தில் இருக்கும் போது கேட்கும் கருத்துகள் மனத்தில் இன்னும் ஆழமாகப் பதிகிறதாம். 'தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்' என்பதற்கு நாம் கருதுவதைவிட உயர்ந்த பொருள் உண்டு. எனவே, குழந்தைப் பருவத்தில் தாய் பாடும் தாலாட்டில், 'இசை' உறக்கத்திற்குப் பயன்படுவதுபோலவே 'இயல்' உள்ளத்திற்குப் பயன்படுகிறது என்பதை உளநூல் விளக்குகிறது. இதற்கு வேறு உதாரணம் காட்டுவானேன்? உலக இலக்கியங்களில் எளிதில் கொடுமுடி காணவொண்ணாத இமய மலையின் ‘எவரெஸ்டு'களாகத் தமிழ் இலக்கியங்கள் விளங்குகின்றன. இதற்குத் தமிழ்த் தாய் மார் தொட்டிலில் இட்டுத் தாலாட்டுகின்ற காலத்திலேயே 'செவிக்குணவாக' ஊட்டிய தாய்மை இலக்கியம் காரணமாய் இருக்குமெனக் கருதலாம் அல்லவா!

இலக்கியத்தில் தாலாட்டு

நாட்டுப் பாடல் இலக்கியமாக வழங்கி வந்த, இத் தாலாட்டை முதன் முதலாக இலக்கியத்தில் ஏற்றியவர்கள்