பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

பாரதிதாசன்


பேணுகின்ற தனி உரிமை பெற்றுள்ள பெண்ணிடத்திலே, இரக்கமுடைய நெஞ்சம், இன்முகமும், பொறையும் குடிகொண்டிருக்கின்றன. மக்கள் இனத்தைப் பெருக்குவதற்கான மகவு அவளிடத்தே தோன்றி, பெண்மையின் பெரும்பயனாகிய தாய்மை நிலையை அவளுக்கு அளிக்கும் போது, தான் ஈன்ற குழந்தையினிடத்திலே அவளுக்கு அளிக்கும் போது, தான் ஈன்ற குழந்தையினிடத்திலே அவளுக்கு அன்பு ஊற்றெடுத்துப் பெருகுகிறது. அவ் அன்பு காரணமாக, குழந்தைக்கு வேண்டிய பணிவிடைகளைச்செய்யும் போது, அது தரும் இன்னல்களை யெல்லாம் பொறுத்துக் கொள்ளவேண்டி வருகிறது. தனக்கு என்ன வேண்டும் என்பதைச் சொல்லால் தெரிவிக்க அறியாத சிறு மகவு, எதற்கெடுத்தாலும் அழக் கற்றிருக்கிறது. எதற்காக அழுகிறதென்பதை நேரத்தையொட்டித் திட்டமாக அறிந்து அதற்கேற்ற பணிவிடை செய்வது, தாயிடம் அமைந்துள்ள அருங் கலைகளில் ஒன்று என்றே சொல்வேண்டும். அழுத குழந்தையை எடுத்து தாய் பாலூட்டிய பின்னும், அது சிறிது முனகிக்கொண்டேதான் இருக்கிறது. இந்தச் சிறு முனைகலையும் நிறுத்த வேண்டி, அவள் குழந்தையைத் தொட்டிலிற் கிடத்தி ஏதேனும் பாட்டுப் பாடுகிறாள்.

பாட்டுப் பாடினால் பாட்டைக் கேட்கிற சுகத்திலே ஈடுபட்டு இளங் குழந்தையானது மெய்மறந்து உறங்கிப் போகும். இப்படிப் பாடுகிற பாட்டு, சிறப்பாக ஏதேனும் சொல்லமைந்த பாடலாகத்தான் இருக்கும் என்பதில்லை, பெரும்பாலும் வெறும் ஒலியாகவே இருப்பதுண்டு. நாவை அசைத்து, இனிய ஒலி எழுப்பினாலே போதும்: குழந்தை கேட்டு உறங்கிவிடுகிறது. இவ்வாறு நா அசைத்தலும்