பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாலாட்டுப்பாடல்கள்

29


உத்தம பக்தாரன ஆழ்வாரைத் தமிழுலகமானது “பெரியாழ்வார்” என்று ஆராமை மீதூர வியந்து போற்றுவதுல்லது, வேறென்ன செய்யக்கிடக்கிறது?


பிள்ளைத் தமிழில் தாலாட்டு

பிள்ளைத் தமிழ் என்ற பிரபந்தங்கள் தமிழிலே எத்தனையோ உண்டாகி இருக்கின்றன. கடவுளையே இளம் பிள்ளையாக்கி, அந்தப் பிள்ளையப் பலவாறு போற்றிக் கொண்டாடுவதில் மிகுந்த மன உல்லாசம் இருக்கிறது.

பிள்ளைத்தமிழ் பத்துப் பகுதிகளாக இருக்கும். இதில் மூன்றாம் பகுதி, தாலப் பருவம் எனப் பெயர்பெறும்; அதாவது குழந்தையைத் தாலாட்டிக் கூறும் பருவம். குழந்தைக்கு வயது ஏழு மாதம் ஆனபோது இப் பருவம் பாடவேண்டும் என்பது மரபு. தாலப் பருவத்திலே தெய்விகக் குழந்தைகளைத் 'தாலோ தாலேலோ' என்று, தாலாட்டிக் கூறுகின்ற தமிழ் நூல்களுக்குக் கணக்கே இல்லை.

பிள்ளைத்தமிழில் ஆறாவது பருவம் வருகைப் பருவம் என்பது; குழந்தையை 'வருக வருக' என்று அழைப்பதைக் கூறுகின்ற பகுதி. பழனியில் எழுந்தருளியுள்ள முருகப்பெருமான்மீது கவிஞரொருவர் ‘பழனிப் பிள்ளைத் தமிழ்' பாடினார். பொதுவாகப் பிள்ளைத்தமிழில் நூறு பாடல்கள் இருக்கும். ஆனால் இவர் பாடிய பிள்ளைத்தமிழில் முப்பது பாட்டுக்களேயுள்ளன. இதன் பத்துப் பருவங்கள்களுள் ஒன்றாகிய வருகைப்பருவத்தில் மூன்றே பாடல்கள் இருக்கும்.

தாலாட்டுப் பாடல்களை இவர் மிகுதியும்