பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாலாட்டுப்பாடல்கள்

57


ஆண்பால் :

இந்தியத் தாய்விலங்கை ஈர்ந்தெறியப் பிறந்தபெரு
மைந்த அருந்தவமே மரமணியே கண்வளராய்.
தீண்டாமை வேண்டுமெனச் செப்புகின்ற
புன்மதியைப்
பூண்டோடு கீண்டெறியப் பிறந்தவனே
கண்வ ளராய்,
நாட்டின் விடுதலைக்கு நல்லுயிரேனுஞ்சிறிதும்
வாட்டம் தவிர்த்தீய மாமகனே கண்வளராய்.
சாந்தம் பொறைகருணை தன்மைசீர் புனிதமிவை
ஏந்து புகழுடைய எழிற்காந்தி நீதானோ.

திருக்குறளும் தாலாட்டும்.

திருக்குறளில் ஈடுபடாதோர் தமிழ் நாட்டில் கற்றோர் யாருமில்லை . புலவர் அனைவரும் எந்தக் காலத்திலும் அதனிடத்து மிக்க ஈடுபாடுடையராய் அதன் பாடல்களையும் கருத்துகளையும் தங்கள் எழுத்துகளில் அமைத்துள்ளார்கள். இளங்கோவடிகள் தொடங்கி இன்றுவரை இது அனைவரும் ஒப்பும் உண்மை .

கச்சியப்ப முனிவர் என்னும் பெரும்புலவர் 18ஆம் நூற்றாண்டினிறுதியில் திருக்குறளின் ஒரு பகுதியை விளக்கிக் கூறும் படலமாகத் தம் புராண மொன்றில் ஒரு படலம் அமைத்திருக்கிறார். குறள் உதாரணக் கதைகளாக அமைந்துள்ள வெண்பா நூல்களும் விருத்தப்பா நூல்களும் எண்ணில் அடங்கா. அங்ஙனமே இந்நூற்றாண்டில்