பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/60

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

பாரதிதாசன்


தாலாட்டுப் பாட முற்பட்ட புலவர் இருவர் திருக்குறள் அதிகாரங்களை அப்படியே தாலாட்டாகப் பாடியிருப்பது அறியத்தக்கது.

முதலாவது, மு.பொ.ஈசர மூர்த்தியாபிள்ளை பாடிய நீதிநெறித் தாலாட்டு. காலம் 1909. இது பல முறை அச்சாகியுள்ளது. குறளின் 133 அதிகாரங்களுக்கும், அதிகாராத்துக்கு ஒரு கண்ணியாக இவர் 133 கண்ணிகள் பாடியிருக்கிறார். சில உதாரணப் பாடல்களைக் கீழே காணலாம்.

கண்னேஎன் கண்மணியே கண்மணியின் உள்ஒளியே
எண்ணே எழுந்தே எழுத்துணரும் மாமணியே.

அகரம் எழுத்தின் முதல் ஆகிநிற்கும் தன்மையைப்போல்
சகம் எலாம் தோற்றுவிக்கும் சாமியை நீகைதொழுவாய்.

நிலையில்லா வாழ்வை நிலையுடைய தாகவெண்ணி
அலைவு தருந் தீங்கியற்றல் ஆகாது கண்மணியே.

கற்றறிந்திலாய் எனினும் கேட்டறிவாய்; அவ்வறிவும்
உற்றதுணையாய் உதவும்; உண்மையிது கண்மணியே.

கேட்டார் வயப்படவும் கேளார் விரும்பிடவும்
பாட்டார் மதிக்கும் உயர் பால்மொழநீ செப்புகண்ணே .

நடத்தையால் நாணுடைமை; ஊன், உடையார்
இடத்துமுண்டு; பாவை இடைக்கம் உடைஉண்டு,
கண்ணே .

தூங்கம் போதெல்லாம் என் தோள்மேலிருந்து, விழித்
தாங்குநெஞ்சி னுள் ஒளிப்பர் அன்புடையார், ஆரமுதே.