பக்கம்:பாரதிதாசன் பரம்பரை.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

பாரதிதாசன் பரம்வரை

ஆனாலும் காவிரிப் பெண்ணே!

ஆண்டுபல எய்தியும் இன்னே தேனார்ந்த செந்தமிழைப் போலே,

திகழிளம் பெண்ணானாய் என்னே! வானார்ந்த காதல்செய்யும் பெண்போல்

வாழ்கின்றாய் வீறுகொண் டென்னில் கானாளும் முதுமையுனை எய்தாக்

கருத்தினை விளக்காயென் கண்ணே!

வண்ணக் கடலுன்னை ஏற்று

வாழ்தற்கு வேண்டியோ என்றும் பண்டைத் தமிழ்த்தேனைப் போலே

பச்சையிளம் பெண்ணானாய்? இன்றேல் தொண்டினைக் கருதியோ என்றும்

தொலையாத இளமையினைக் கொண்டாய்? விண்டிடுக என்றுமணம் கேட்கும்

விழைவினை என்னென்று சொல்வேன்!

விண்தந்த மழையினை வாங்கி

விழைவோடு தமிழ்நாட்டிற் சென்று பண்பட்ட கிலமாகச் செய்வாய்

பயிராக்கி உயிர்காக்கும் தாயே, பெண்மக்கள் தாய்க்குலம் அன்றோ?

பெருவாழ்வும் அவர்களால் அன்றோ? கண்டொத்த காவிரித் தாயைக்

கருத்தொடு வாழ்த்துவம் வாரீர்!

-மு. அண்ணாமலை

இதழ் பொன்னி, பிப்ரவரி 1947,