பக்கம்:பாரதிதாசன் பரம்பரை.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமைக்கவிஞர் சுரதா il

பின்வரும் பாடலைப் பாடிய இளைஞர் காரா. காச்சியப்பன் இராமநாதபுரம் மாவட்டம் ஆத்தங்குடியைச் சேர்ந்தவர். இப்பொழுது திருச்சி தேசியக் கல்லூரியில் படித்து வருகிறார். கவியரசர் பாரதிதாசன் பரம்பரையினர் இவர் என்பதற்கு

மழை நல்ல சான்று.

-ஆசிரியர்

மழை

ஒளிர்வெயில் மறைக்தி ருக்த ஒரு போதிற் காட்டுப் பக்கம் குளிர்தரும் காற்று வந்து குப்பென்று வீசி கிற்க விழுந்தது மழையின் துாற்றல் விண்னெலாம் ஆர வாரம் எழுந்தது! மேகம் மின்னி இடித்தது! சிங்கம் என்ன!

வையத்திற் கமுத மாக வந்திடும் மழையைக் கண்டு, செய்யதம் உள்ளம் ஆரச் செடிகளும் கொடிகள் மற்றும் வெய்யவன் கொடுமை மாற்ற விளங்கிடும் மரங்கள் தாமும் கைஎனத் தளிர்கள் நீட்டிக் களித்திடும் சீர்த்தி என்னே!