பக்கம்:பாரதிதாசன் பரம்பரை.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமைக் கவிஞர் சுரதா 17

விண்மீன்கள் புரள்கின்ற வியன்கடலென்

றேகொண்டால், விண்னே? உன்றன் வெண்மேகம் அலைபோன்று சுருள்கின்ற

பண்பதுவும் மிகப்பொ ருத்தம்; தண்மதியோர் கப்பலெனச் செல்கின்ற தென்பதுவும் தவறின் றாயின், நண்பகலுக் கிவ்வுவமை பொருந்தாதென்

றேசொல்வர், நாவல் லோரே!

விடிவெள்ளி தோன்றிடவும் வெளுக்கின்ற கிழக்கின்கண் ஞாயி றென்போன் அடிவானத் திருந்துயர உலகெல்லாம்

பொன்மயமாம் அழகுக் காட்சி, கெடிதாகி கில்லாமற். பகலெல்லாம்

கொடும்வெயிலாய், மாலை நேரம் படிகின்ற போழ்தத்தே குருதிநிறம்

படர்வது தான் புரட்சிப் பண்போ?

நிலைமையினுக் கேற்றாற்போல் தோற்றங்கள்

பலகாட்டி, நிலவும் வானே! நிலவொளியும் கதிரொளியும் பெறுகின்றோம்;

அறிவொளியும் வேண்டி கின்றோம்! உலகறிஞர் பலருன்னை ஆராய்ந்தும். கிலைமுற்றும் உணர்ந்தா ரில்லை! கலைகட்கும் எட்டாது கருத்தெல்லாம்

கவர்கின்றாய், காட்சி யாலே! - புத்கனேரி ரா. சுப்பிரமணியம்

. . . இதழ் பொன்னி

1947–Quo