பக்கம்:பாரதிதாசன் பரம்பரை.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 பாரதிதாசன் பரம்பரை

'முடியரசன் இசைப்பாடல்கள் எழுதுவதில் தேர்ந்தவர். அவர்தம் இயற்பெயர் துரைராஜ். பெரியகுளம் அவர் சொந்த ஊர். நிலவு" அவர்

இயற்றியது.

-ஆசிரியர்

நிலவு

ஒளிமிகுந்த குளிர்கிலவே உன்னைக் கண்டேன்

உள்ளமெலாம் உவகையுற இன்பங்கொண்டேன் களிமிகுந்த காதலருக் கின்யத்தோணி

கடைந்தெடுத்த வெண்முத்தம் கின்றன்மேனி தளிர்போலும் குழந்தைகளின் கதறல்ரீக்கும்

தாயர்தமக் குதவிடுவாய்! உலகைக் காக்கும் எளிமைமிகு தொழிலாளர் அயர்ந்தபோது

எழுந்துமுகம் காட்டிமகிழ் ஆட்டும் மாது!

பாம்பொன்று கினைவிழுங்கும் என்று சில்லோர்

பகர்ந்திடுவார் அதைகம்பார் அறிவில் கல்லோர் வேம்பன்னார் எமைவீழ்த்த இணைய சூழ்ச்சி

விளைத்தார்கள் தொலைத்தார்கள் தமிழர்ஆட்சி. கூம்புவதேன் தாமரைகள் உன்னைக்கண்டு?

குடைந்து தேன் அருந்தமலர் சென்றவண்டு தேம்புவதைக் காணாயோ சிறையிற்பட்டு?

சென்றிடுவாய் வெளியில்விடச் சொல்லிவிட்டு.