பக்கம்:பாரதிதாசன் பரம்பரை.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 பாரதிதாசன் பரம்பர்ை

காதல் விருந்தைப் படைத்துள்ள நண்பர் இராம. வே. சேதுராமன் அவர்கள் ஆர்வம் நிறைந்த இளைஞர்-அமைதியான உள்ளம் பெற்றவர். அவர்தம் சொந்த ஊர் நாச்சியாபுரம். நிறைய அவர் எழுதுவதில்லை. என்றாலும் அவர் எழுதியவை எவையும் குறைவுடையன அல்ல,

-ஆசிரியர்

காதல் விருந்து

நீலத்தில் வண்ண ஆடை

கிகரில்லா வைரப் பூக்கள்

கோலஞ்செய் கச்சு! ஆங்கே

குலுங்கிடும் பருவச் சின்னம்!

மேலெலாம் ஒளியின் சாயல்!

மேகமா? கூந்தல் தானா?

வேலையில் களைத்தார்க் கெல்லாம் விருக்தடா வானின் காட்சி!

'வானென்று சொல்வர், அன்னாள்

வனப்பிற்கோர் எல்லை தானோ?

மாகிலம் காப்பாள்! ஆங்கு

மழையெனத் தோற்றம் செய்வாள்!

கானிலம் படைப்பாள்! அந்த

கங்கையாள் செயலின் சக்தி!

வானத்துப் பெண்ணாள் யாண்டும்

வாஞ்சையின் செல்வி வாழ்க!