பக்கம்:பாரதிதாசன் பரம்பரை.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 பாரதிதாசன் பரம்பரை

அவளுக்கு இல்லை' என்ற பாடலின் ஆசிரியர் சி. இராமசாமி உத்தமபாளையம் உயர் நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக இருந்து வருகிறார். நாமக்கல்லுக்கு மேற்கேயுள்ள கீரம்பூர் என்னும் கிராமம் அவர்தம் சொந்த உள். கருவைக் கண்ணன் சி. இரா. தேசிகன்: என்ற புனைபெயர்களிலும் அவர் பாடல்கள்

எழுதப்பட்டுள்ளது.

(ք -ஆசிரியர்

அவளுக்கு இல்லை

மணஞ்சேர்த்துத் தன்மகளின் வாழ்வைக் காண

மனத்தாசை மிகவிருக்கும் வருமாப் பிள்ளை பணஞ்சேர்த்த குடும்பத்தைச் சேர்ந்தோ னானால் பரவாயில் லையென்னும் விருப்பி ருக்கும். கணம்பார்க்கும் சோதிடனை அழைத்து வந்து

கலியாண நாள்பார்க்கும் கருத்தி ருக்கும். குணம்பார்த்தங் கிருவருக்கும் பொருத்தங் காணும்

குறிக்கோள்தான் சிறிதேனும் அவளுக் கில்லை.

உரிமைப்பெண் கேட்கின்றார் கொடுக்க லாமா?

உரைத்தருள்க சாமி"யெனப் பல்லி வாயில்

சரியாகச் சகுனங்கேட் கின்ற குப்பைச்

சாத்திரமுக் தெரிந்திருக்கும், கலியா ணத்தில்

விரிவான சாப்பாடோ டிசைக்கச் சேரி

விதவிதமாய் கடத்துதற்கும் விருப்பி ருக்கும்

தெரிவையவள் மனதிலவன் இடம்பெற் றானா?

எனத் தேடும் அறிவதுதான் அவளுக் கில்லை!