பக்கம்:பாரதிதாசன் பரம்பரை.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதிதாசன் பரம்பரை

பெண்ணென்று சொல்லுவதா? என்ற இப் பாடலை இயற்றிய திரு. அண. இராமநாதன் வேருப்பட்டியைச் சேர்ந்தவர். தமிழுணர்வு அவர்

தம் தலையாய படைப்பு.

-ஆசிரியர்

பெண்ணென்று சொல்லுவதா?

மங்கையின் புன்முறுவல்-காட்டி

மயக்கும் முல்லைக்கொடி-அவள் கொவ்வையின் பேரெழிலை-மொட்டாய்க்

குவித்துக் காட்டுகின்றாய்!-அவள் தங்கிடா இடைபோல-வாடித்

தவித்துத் துடிக்கின்றாய்!-அவள் பொங்கொளி மேனியைப்போல்-தளிர்

பூத்துக் குலுங்கு கின்றாய்!

மரத்தைப் படர்கின்றாய்!-அவள்

மைக்தனைப் படர்கின்றாள்-மிக உரத்தைப் பெற்றுவிட்டால்-வெடித்(து)

உப்பிச் சிரிக்கின்றனைl-அன்பின் தரத்தைப் பெற்றுவிட்டால்-அவள்

தானும் சிரிக்கின்றாள்!-அசை சிரத்தில் மலர்கின்றாய்!-அவள்

சிங்தையில் மலர்கின்றாள்!