பக்கம்:பாரதிதாசன் பரம்பரை.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமைக் கவிஞர் சுரதா 35

சிரித்திருக்கும் இளமையினைத் தெரியக் காட்டும்

சிற்றிடையாள் வளையொலியின் பொருள் தான் என்ன? விரித்திதழை-பல்லொளியை விளங்கக் காட்டி

விழிதாழ்த்தி எனைவிழுங்க எங்கு கற்றாள்? பிரித்தற்கிங் கிடமில்லை என்று பேசும்

பெயராத அணைப்புடையாள் கண்ணி ரண்டும் கருத்தோடு கவிழ்ந்துகிலம் கோக்கு தல்தான் கன்னத்திற் கிருமுத்தம் போதும் என்றா?

-சி. திருநாவுக்கரசு

இதழ் பொன்னி, 10.8.1948

மலர்-3

இதழ்-13