பக்கம்:பாரதிதாசன் பரம்பரை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமைக் கவிஞர் சுரதா 39

குழித்தலையை அடுத்த கடம்பர் கோவிலைச் சார்ந்தவர் தோழர் ஞா. மாணிக்கவாசகன். புரட்சி வேகத்தில் கவிதையின் ஒவ்வொரு வரியும் எக்காளமிடக் காணலாம்,

-ஆசிரியர்

எச்சரிக்கை

எல்லையில்லா இன்பத்தைக் குவித்து வைத்தே

எடுத்துண்ணச் செல்லுகின்ற ஏழை முன்னே இல்லையிதில் உனக்குரிமை செல்க' என்றே

இருகையால் தடைசெய்யும் செல்வர் பேச்சு, நல்லுலகில் ஏழைமக்கள் வாழ்வு வேண்டி

கடத்துகின்ற புரட்சிக்கு வகுத்த பாதை! தொல்லையினைப் போக்குதற்கே ஏழை வாழ்வில் தும்முகின்ற துயரஒலி புரட்சி வேட்டாம்!

இரத்தத்தைக் கண்ணிரால் பெருக்கி விட்டே

ஏழையழும் குமுறலொலி குடிசை கேட்கும்! உரத்தகுரல் கேட்டிருக்கும் மாடி வீட்டில்

உல்லாச நிலைபற்றி இருக்கும் பேச்சு! உளுத்திருக்கும் சமுதாய அடிப்படையில்

உயர்ந்துவிட்ட கலைக்கூடம் ஏழை மூச்சு முழக்கத்தால் மடமடென மண்ணில் சாயும்

வையமிதைப் புரட்சியென்று வாழ்த்துக் கூறும்!