பக்கம்:பாரதிதாசன் பரம்பரை.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமைக் விஞர் சுரதா 41

'பாலைவனம் தமிழரசன் இயற்றிய கவிதை. அவர் தம் இயற்பெயர் சி மாணிக்கம் என்பதாகும். மதுரை வாசியான அந்த இளைஞர் அமெரிக்கன் கல்லூரி மாணவர்.

-ஆசிரியர்

பாலைவனம்

பார்த்திடும் இடத்தி லெல்லாம் பரந்தமண் பரப்பை யன்றி கீர்த்துளி காண்ப தற்கு

நெடுந்துாரம் செல்ல வேண்டும். வார்த்தைகள் சொல்ல வியலா

வறுமையால் வாடும் மக்கள் ஆர்த்திடும் ஒலியைப் போலப்

பேய்க்காற்(று) அலறி வீசும்!

திமிங்கிலம் முதுகைப் போலத்

திரள் மணல், அடிமை மக்கள் குமுறிய நெஞ்சம் போலக்

கொதிப்பேறிப் புகையும், ஆங்கே தமிழனின் கீர்த்தி இந்நாள்

சிதறுண்டு தவிப்பு தைப்போல் அமைந்தன சோலைப் பூங்கா!

அங்கெல்லாம் தென்றல் வீசும்: tw.—3