பக்கம்:பாரதிதாசன் பரம்பரை.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமைக்கவிஞர் சுரதா 49

கற்பனையைப் பற்றித் தம் கருத்தினைக் கவிதையாக்கியுள்ள தோழர் கு. திரவியம் மதுரை யைச் சேர்ந்தவர்; பல தமிழ் ஏடுகளில் ரவி' என்ற புனைபெயரில் எழுதி வருகிறார்.

-ஆசிரியர்

கற்பனை

ஒலியற்ற வேளையிலே, இருள்கூட்டும் வானில்

ஒளிவீசித் துடிக்கின்ற பலவெள்ளி கடுவே குலவுகின்ற எழிற்கன்னி இன்முகத்தி லெல்லாம்

குளிர்நகையைத் தெளிக்கின்ற வெண்ணிலவின் ஊடே உலவுகின்ற உளத்தினிலே சிந்தனைகள் நடுவே

ஊடுருவிப் பாய்கின்ற எண்ணஒளி தானே உலகிடையே காவியமாய்ச் சிற்பமதாய் மாறும்!

உயிரோட்டம் கொள்கின்ற ஓவியமாய் மின்னும்!

வாசமுல்லை மலருவதை வண்டிருந்து பாடும்

வடிவத்துக் காட்சியினை வடிக்கின்ற கலைஞன் பாசமிகும் உள்ளத்தின் பண்ணொலியாய் மாறும்!

பருவத்தைக் கண்டவுடன் பட்டுவிட்ட மரங்கள் ஆசையுடன் தளிரிலைகள் ஆட்டிகிற்றல் போல

அரியதொரு கற்பனையின் உறவுதனைக் கூடி வீசுகின்ற தென்றலினும் இனியதொரு சுவையை

மீட்டுகின்ற கவிதைகளாய்க் கலைக்கரத்தில் மின்னும்!