பக்கம்:பாரதிதாசன் பரம்பரை.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமைக் கவிஞர் சுரதா 55

"எங்கள் வாழ்வை'ச் சித்தரிக்கும் தோழர் வா. செ. குலோத்துங்கனாரின் இயற்பெயர் குழந்தைசாமி. திருச்சி மாவட்டம் தென்னிலையை யடுத்த வாங்கலாம் பாளையம் என்ற சிற்றுரர் அவர்தம் சொந்த ஊர். இப்பொழுது காக்கி னாடா பொறியியற் கல்லூரியில் படிக்கின்றார்.

-ஆசிரியர்

எங்கள் வாழ்வு

கலைசொட்டும் கணிளங்கள் வாழ்வு-அன்புக்

கதிர்வீசும் விழிசொல்லும் கதைகேட்டு வாழ்வோம்! மலைவிட்டு வருகின்ற தென்றல்-உலவும்

மலர்க்காட்டில் குயிலோடின் னிசைபாடி மகிழ்வோம்! சிலையொத்த தளிர் மேனி உடலார்-காதல்

தேன்தன்னை, மூரல்மலர் செம்பவள இதழாம் இலையிட்டு வழங்கிடுவர் உண்போம்-உண்டு

இன்பத்தி லூறிஉயர் அன்பிலே திளைப்போம்:

திங்கள் மலர்வானச் சோலை-வாரிச்

சிந்தும் சுவைத்தேன் அருந்தித் திளைத்தே பொங்கும் உணர்ச்சிப் பெருக்கில்-காதல்

பூத்துக் குலுங்கிப் பொலன்செய்ய, மின்னும் செங்கை அணைப்பில் களிப்போம்!-ஊற்றுத்

தீஞ்சுவை நீர் போல் தெளிந்து கிறைந்து தங்கச் சிலைசமைந் தாற்போல்-வையத்

தாழ்வு கடந்த தனிநிலை காண்போம்!