பக்கம்:பாரதிதாசன் பரம்பரை.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ö0 பாரதிதாசன் பரம்பரை

தோழர் தன. சுந்தரராசன் திருமறைக்காட்டை யடுத்த கடிநல்வயல் என்ற சிற்றுாரைச் சேர்ந்தவர். அழகிய தமிழ் அவர் பாடல்களில் எழில்பெருக்கும். 'ஏன் சிரித்தாள்? அதற்கொரு எடுத்துக்காட்டு.

-ஆசிரியர் ஏன் சிரித்தாள்? அக்திவரப் பூக்கின்ற செந்தாமரை போல

அழகுமுகம் மலர்ந்திட்டாள், என்விழியால் பறித்தேன் சக்தத் தமிழ்ச்சுவையின் தேனமுத ஒளியைத்

தரைகுளிரப் பொழிகின்ற நிறைகலைகி லாவும் வந்ததுவே விந்தைஎன்ன? கிலமீதில் என்னை

மயக்குதற்கோ வந்துகின்றாள்? கைமிஞ்சும் காதல் உந்துகின்ற உணர்ச்சியதை உதட்டினிலே கட்ட

உடைத்தாள்மா துளைமுத்தை உதிர்த்தாள்ஏன்சிரிப்பாய்?

இடுப்பொடிப்பாள் இடச்செவியில் மணித்தொங்கல் ஆடும்

எழிற்கன்னம் முத்தமிட வலத்தொங்கல் வாடும். கொடிப்புருவம் நுதல் மேட்டில் படரும், நுதல் சுருங்கும்

கோடிவிழிச் சாடையிலே குளிர்ப்பார்வை அரும்பும்படிப்,புனிதை எனைஒருநாள் சக்தித்தாள், பார்த்தேன்.

பழனத்தில் பூத்திடுக்தா மரைமுகமாய்ப் பூத்தாள் அடுப்பாக எரிக்கின்றாள் அணைப்பறியேன், ஏனோ ஆம்பலிதழ் பூக்கின்றாள்? இதற்காகத் தானோ?

-தன. சுந்தரராசன்

இதழ் பொன்னி, 30.10.1948 மலர்-2

இதழ்-13