பக்கம்:பாரதிதாசன் பரம்பரை.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமைக்கவிஞர் சுரதா 65

தோழர் பெரி. சிவனடியான் புதுவயலைச் சேர்ந்தவர். காரைக்குடிக்கல்லூரியில் கலைபயின்று வரும் இவர்கவிதைகளும் எழுதுவார். சொற்பொழி வாற்றுவதிலும் வல்லவர்.

-ஆசிரியர்

மாற்றந் தேவை!

கல்விதனில் அரசியலில் சமூக வாழ்வில்

கடவுளரை வணங்குகின்ற முறைமை தன்னில் தொல்லைதரும் மதப்பித்தில், தோகை கல்லார்

தோய்ந்திருக்கும் அறியாமை, மடமை தன்னில் எல்லையிலா இழிவுதனை ஏற்றி வைக்கும்

இந்துமதப் புராணத்தை ஏற்கச் செய்து புல்லறிவால் மக்களைஏ மாற்றி வாழும்

பொல்லாதார் வாழ்விவற்றில் மாற்றங் தேவை!

ஆலையிலே பாட்டாளி ஆவி போகும்,

அரியணையில் அரசாங்கம் அயர்ந்து தூங்கும், வேலையிலாத் திண்டாட்டம் விரைந்து மேவும்,

வேண்டாத இந்திவிதை விளையத் தூவும், சோலையிலே உலவுகின்ற கிளியைப் போலே

சுகம்கான முதலாளி மார்கள் வாழும் ஆலயத்தின் செல்வத்தை அழுத்திக் காக்கும்,

அறிவில்லாச் செயல்களிலே மாற்றங் தேவை!