பக்கம்:பாரதிதாசன் பரம்பரை.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

இந்த 47 கவிஞர்களில் இன்று புகழ் மிக்கக் கவிஞர் களாக விளங்குபவர்கள் பலர் உண்டு. மற்றத் துறைகளில் பெயர் பொறித்து நிற்பவர்களும் உண்டு. அன்று குடத்து விளக்காக இருந்த இந்தக் கவிஞர் கூட்டத்தைக் குன்றிவிட்ட தீபமாக ஏற்றி வைக்கின்ற வாய்ப்பு பொன்னிக்கு 37 ஆண்டு களுக்கு முன்பு கிட்டியது பெரும் பேறாகும்.

கவிஞர் சுரதா தமது ஆசானாகிய பாவேந்தரிடம் மட்டற்ற ஈடுபாடும் மதிப்பும் கொண்டவர், பாவேந்தரின் பெருமையினை நாளும் பரப்பி வருகின்றவர். பாவேந்தரின் கவிதைப் பணியை அவருடைய வழியில் நின்று சரியாகச் செய்து வருகின்றவர். பாரதிதாசன் பரம்பரை' என்னும் இந்நூலை முறையாகத் தமிழகத்திற்குப் படைத்திருப்பதன் மூலம் கவிஞர் சுரதா பாவேந்தரிடத்தும், பாரதிதாசன் பரம்பரையைச் சேர்ந்த தமது சகோதரக் கவிஞர் களிடத்தும், அதற்கெல்லாம் மேலாகக் கவிதை உலகத்தின் பாலும் அவர் கொண்டிருக்கும் பேரார்வம் நன்கு புலனா கிறது. பாரதிதாசன் வழியில் இன்று தலை தூக்கி வரும் இளங் கவிஞர்களை எல்லாம் ஊக்கப்படுத்தித் தமக்குப் பின் ஒரு புதிய பரம்பரையை உருவாக்கிக் கொண்டிருக்கும் கவிஞர் சுரதாவின் பரந்த உள்ளத்திற்கு இந்த நூல் தக்க சான்றாகும்.

கோலாலம்பூர் \

27-7-1979 s முருகு சுப்பிரமணியன்

ஆசிரியர் புதிய சமுதாயம்.