பக்கம்:பாரதிதாசன் பரம்பரை.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதிதாசன் பரம்பரை

தோழர் சங்கீத பூஷணம் எஸ். எம். இராமநாதன் அவர்கள் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள புதுவயலைச் சேர்ந்தவர். இசையில் வல்லவர் என்பதை அவர் பெற்ற பட்டம் எடுத்துக்காட்டு கிறது. புரட்சி செய்தால் என்ன?" என்ற பாடல் அவர் புரட்சிக் கவிஞரின் பரம்பரையினர் என்பதை

எடுத்துக் காட்டுகிறது.

-ஆசிரியர்

புரட்சி செய்தால் என்ன?

காலைமுதல் மாலைவரை வயல்கள் தம்மில்

களைப்பார ஓய்வின்றி உழைக்கும் மக்கள் ஒலையிலே கெல்லென்றே எழுதிப் பார்க்கும்

உலுத்தவொரு கிலைமையிந்த காட்டிலுண்டு), அவ் வேளையிலே பாடுபடா தொருசாரார்தம்

வீட்டில்நெற் குவிக் திருக்கும்; ஏழை மக்கள் வேலைசெய்தும் உண்ணவழி இல்லை யென்றால் மேதினியில் பெரும்புரட்சி செய்தால் என்ன?

ஆலையிலே தொழிலாளி அயர்ச்சி யின்றி

ஆடைகளை ஆக்கிகிதம் குவித்து வைத்தும் ஏழைமக்கள் வாங்கிஅதை அணிவ தற்கோ

இயலவில்லை; ஏனென்றால் எங்கே யோஓர் மூலையிலே கொண்டதனை முடக்கி விட்டார்,

மிகலாபம் வேண்டுகின்ற உளத்தி னோர்கள். காலகிலை உணர்க்(து) அவர்கள் திருந்தா விட்டால் காசினியிற் கடும்புரட்சி செய்தால் என்ன?