பக்கம்:பாரதிதாசன் பரம்பரை.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 பாரதிதாசன் பரம்பரை

தோழர் கி. மனோகரன் அவர்களின் ஊர் நாகர்கோவிலை அடுத்த கோட்டாறு. மலையாள மாணவராகிய இவர் தன்மான இயக்கப் பற்றும்

தமிழார்வமும் உடைய இளைஞர்.

-ஆசிரியர்

செல்வதெங்கே?

காதலுளம் எங்கள் உளம்

கவலையிலா வாழ்வு சாதலில்லை சாதிவெறி

சமயச்சதி யில்லை. பேதமில்லை: வாழ்வினிலே

பிணக்குகளு மில்லை வாதமில்ல்ை, ம்னத்தினிலே

வாதனையு மில்லை.

கனல்பிழம்பாய்க் காட்டும்விழி குளிர்நிலவாய் மாறும் கணல்மொழியாள் வாயூறும் தேனருவி யுண்டு? தனைமறந்தே தக்தகெனத்

தலைசுழற்றும் உள்ள்ம் எனையணைத்தாள் முயக்கினிலே

ஏறியெழும்! வாழும்!

செங்கரும்பை வாங்கிவரச்

சொன்ன நினைவின்றித் தங்குமிடம் வந்தவனைத்

தையலவள் கேட்டாள், செங்க்ரும்பை வாங்கிவரச்

சொன்னதெங்கே: யென்று செங்கரும்புன் இதழிருக்கச்

செல்வதெங்கே?' என்றேன்.

-கி. மனோகரன்

இதழ் - பொன்னி, 10.10.1949 மலர்-3

இதழ்-17