பக்கம்:பாரதித் தமிழ்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்வாமி அபேதானங்தர் 109

அபேதாநந்தருக்கும் அவர் போன்ற ஞானி களுக்கும் நாம் பெரிய உபசரணைகள் நடத்துவதால் மட்டும் அவர்களது பிரீதிக்கு உள்ளாய் விடமாட் டோம். பல்லக்குகள், புஷ்பஹாரங்கள், வாத்தியங் கள் என்பவற்றைக் கொண்டு ஒரு ஞானியின் கிருபையைச் சம்பாத்தியம் செய்து விடுவதென்றால் அது எளிதான காரியமா? அவர்கள்து உபதேசத்தின் உண்மையைக் கிரகித்து நம்மால் இயன்றமட்டும் அதன்படி நடக்க முயல்வதே நாம் அவர்களுக்குச் செய்யக்கூடிய கடமையாகும்.

தீரத் தன்மையைப்பற்றி மட்டிலுமல்லாமல் ஐக்கியம் முதலிய மற்ற விஷயங்களைப்பற்றியும் அபேதாநந்தர் பேசியிருக்கிறார். இந்தியாவில் 30 கோடி ஜனங்கள் இருக்கிறார்கள். ஆனல் ஒருவனுக் கொருவன் சம்பந்தமில்லாமல் ஒவ்வொருவன் ஒவ் வொருமாதிரி எண்ணங் கொண்டிருக்கிருன். ஆத லால் வெவ்வேறு வகைப்பட்ட 30 கோடி எண்ணங் கள் ஏற்பட்டுப் போய்விடுகின்றன. எனவே ஒரு காரியமும் எளிதாகச் சாதிக்க முடியாமல் போய் விடுகிறது. பிரிட்டிஷ் தேசத்தில் 4 கோடி ஜனங்கள் மாத்திரமே இருந்த போதிலும் அவர்களனைவரும் ஒரே விதமான எண்ணங் கொண்டிருப்பதனல் அவர்கள் காரியங்கள் மிகவும் எளிதாகக் கைகூடிவிடு கின்றன. இதனை விவேகாநந்தர் வெகு தெளிவாக எடுத்துக் கூறி இருக்கிரு.ர்.

இது நிற்க. அபேதாநந்தர் சென்னை மாகாணத் திலும், நகரத்திலும் பெற்ற உபசரணைகள் அவருக்கு இத்தேசம் முழுவதிலும் நடைபெறும் என்பதில் ஆக்ஷேபமில்லை. ஆனால் அத்துடன் இவர் சென்ற இடமெல்லாம் ஜனங்கள் இவரது போதனைகளைப் பக்தியுடன் கேட்டுப் பயன் பெறுவார்களென்று இத்தகைய மஹான்கள் இந்நாட்டிலே தோன்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/108&oldid=605353" இலிருந்து மீள்விக்கப்பட்டது