பக்கம்:பாரதித் தமிழ்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்திரிகை

25 செப்டம்பர் 1903 பராபவ புரட்டாசி 10

யாணர்க் குறையுளா மிந்து நாடதனிற் காணற் கினிய காட்சிகள் பலவினு மாணப் பெரிய வனப்பமைந் தின்கவி வாணர்க்கமுதா வயங்கிடும் பொருளி தென் றுாணப் புலவோ னுரைத்துளன் முன்ள்ை அஃதுதான் :கருமையிற் படர்ந்த வானமாங் கடலிடை ஒருமையிற் றிகழு மொண்மதித் தீவினின் றெல்லாத் திசையினு மெழில்பெற ஆற்றுஞ் சொல்லா வினிமைகொள் சோதியென் ருேதினன். ஒர்முறை கடற்புற மணன்மிசைத் தனியே கண்ணயர்ந் திடைப்படு மிரவி லினிதுகண் விழித்துயான் வானக நோக்கினேன் மற்றதன் மாண்பினை யூனமா நாவினி லுரைத்தலும் படுமோ? நினைவறுந் தெய்விகக் கனவிடைக் குளித்தேன்

வாழிமதி!

--சி. சுப்பிரமணிய பாரதி

யாணர்-அழகு. ஊணப் புலவன்-ஆங்கிலப் புலவன்.

பா. த.-8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/112&oldid=605360" இலிருந்து மீள்விக்கப்பட்டது