பக்கம்:பாரதித் தமிழ்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய உயிர் 163

லகடினம். அஃதில்லாத பக்தி தேங்காய்க்கும் சர்க் கரைப் பொங்கலுக்கும் வீண் செலவு.

தெய்வம் உண்டா?

தெய்வம் உண்டென்று நீ நம்புகிருயா? உண் டானல் அது சர்வ சக்தியுடையது. அது என்னைப் படைத்தது. நாகை என்னே உண்டாக்கிக் கொள்ள வில்லை. அது என்னைக் காக்கின்றது. எனது செய்கை யாலே நான் உயிர் பிறக்கவில்லை. அதைய்ே சரணடை வேன். இனி எதற்கும் பயமில்லே. அதை நான் பரிபூர்ணமாகச் சரணடைந்தால் அதன் சக்திகளெல் லாம் என்னிடத்திலே தோன்றும். மேருவைச் சார்ந்த காக்கையும் பொன்னிறமடையும். அதனல் அமரத் தன்மை பெறுவேன். இவ்விதமாக ஒருவ்ன் மனத்தை உறுதி செய்து கொண்ட பிறகு அவ்வுறு திக்கு இணங்கும்படி தன் செய்கைகளே யெல்லாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

அடிப்படை

முதலாவது, நோய் தீர்த்துக்கொள்ளவேண்டும். நோயுள்ள உடம்பு பயனில்லை. நோயை ஒருவன் தனது மனே பலத்தாலே நீக்கி விடலாம். நல்ல காற்று, நல்ல நீர், ஒளி, வெயில், இவற்றிலே உடம்பு பழகவேண்டும். நாள்தோறும் ஏதேனும் ஒர் காரியத்திலே உடல் வெயர்க்கும்படி உழைக்க வேண்டும். இது புதிய உயிர் கட்டுவதற்கு அடிப்

t_!6ô) l–.

உணவு இரண்டாவது, நல்ல உணவு தேடி உண்ண வேண்டும். சுத்தமாகவும் ருசியாகவும் வயிறு நிறைய உணவு கொள்ள வேண்டும். மிகினும் குறையினும் நோய் செய்யும்.” நமது தேசத்து ஜனங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/162&oldid=605437" இலிருந்து மீள்விக்கப்பட்டது