பக்கம்:பாரதித் தமிழ்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நவராத்திரி

சி. சுப்பிரமணிய பாரதி

4 அக்டோபர் 1916 நள புரட்டாசி 19

இத் தலைப்புடன் இரண்டு கட்டுரைகள் மூன்றாம் தொகுதியில் வெளிவந்துள்ளன. பகுதி-தத்துவம்.

கீழ்க்கண்ட பகுதி கடைசிப் பத்தியாக இரண்டாம் கட்டுரையில் இருக்கவேண்டும். ஆனல் அது வெளியாகவில்லை.

“அறிவு தான் விரும்பும் பொருளின் இயற்கை யைப் பெற்றுவிடுமென்பதை அனுபவத்தில் தெரிந்து கொள்வதும் எளிது. ஆதலால், நவராத்திரி பூஜை தொடங்கியிருக்கும் இக்காலத்தில் எல்லா வஸ்துக் களையும் எல்லா அணுக்களையும் இயக்குகின்ற பரா சக்தியை ஸ்தாபனம் செய்துகொள்ளுவோம். அகண்டத்தில் விளங்கும் தேவியைப் போற்றுவோம். உலகமே அவள் வடிவமாதலால் உலகத்தை வணங்கு வோம். இமயமலையிலே பார்வதியாகவும், தெற்கு முனையிலே கன்யாகுமரியாகவும் திருக்கோயில் கொண்டவளை மஹாலக்ஷ்மி தேவியை, அறிவை, சக்தியை, ப்ரதிஷ்டை செய்து பூஜிப்போம். ஓம்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/216&oldid=605520" இலிருந்து மீள்விக்கப்பட்டது