பக்கம்:பாரதித் தமிழ்.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 பாரதி தமிழ்

சேர்ந்தபடியால் இவன் இப்போது ஜீவன் முக்தனய்

L-L-IT@s.

“அவனுடைய தகரப்போகணி தூக்கிக்கொண்டு போகிற காந்தாரி கோவிந்தா! கோவிந்தா!’ என்று கத்துகிருளே அதன் பொருள் தெரியுமா? .......சொல்லுகிறேன் கேள். தன்னுடைய கணவன் பரம பதத்தைக் கண்டு கோவிந்த ஸ்தானத்தை அடைந்து விட்டானென்பதை அவள் உலகமறிய முழங்குகிருள். அவளுடைய பாதிவ்ரத்ய மஹிமை யில்ை இவன் இந்தப் பதவி யடைந்தான்” என்று சொன்னர். -

நான் அப்போது குள்ளச் சாமியிடம்:-"ஜீவன் முக்தி பெற்றும் பிச்சைத் தொழில் ஏன் செய் கிருன்? என்று தவறுதலாகக் கேட்டேன். அவர் அதற்கு நேரே மறுமொழி கூருமல் தாம் முன்பு கூறி வந்ததற்குத் தொடர்ச்சி சொல்வதுபோல:-"ஆகை யால், இவன் போன ஜன்மத்தில் இருந்ததைக் காட் டிலும் இப்போது கோடிமடங்கு மேலான நிலைமையி லிருக்கிருன். இவனைக் குறித்து நீ கவலைப்படவேண் டிய அவசியமில்லை” என்றார். அப்போது நான் குள்ளச்சாமியை நோக்கி:-"எனக்குப் பூர்வ ஜன்ம விஷயத்தில் இன்னும் நிச்சயமான நம்பிக்கை ஏற்பட வில்லை’ என்றேன். இதைக் கேட்டவுடன், அந்த யோகீசுரர் எனக்கு மறுமொழி கொடுக்காமல், ‘அரே! ராம், ராம்’ என்று சொல்லி நகைப்புக் காட்டி ஒடிப் போய் விட்டார்.

பின்பு, குருடன் போன திசையிலே திரும் பினேன்.

மறுபடி குருடன் கத்துகிருன்:-"தென்னை மரத் திலே கிளி பறக்குது, :: ஸ்திரீ - கோவிந்தா!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/309&oldid=605669" இலிருந்து மீள்விக்கப்பட்டது