பக்கம்:பாரதித் தமிழ்.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தாமணி

(ஒரு சிறு கதை) ருமான் ஸி. சுப்பிரமணிய பாதி எழுதியது.

14 செப்டம்பர் 1919

காந்தாமணி, உங்கப்பா பெயரென்ன?” என்று பாட்டி கேட்டாள். ஒரு கிணற்றங்கரையில் நடந்த ஸங்கதி. கோடைக் காலம். காலைவேளை. வானத்திலே பால ஸஅர்யன்-கிரணங்களை ஒழிவில் லாமல் பொழிந்து விளையாடுகிருன்; எதிரே நீலமலை: பச்சை மரங்கள்; பசுக்கள்; பல மனிதர்; சில கழுதைகள்; இவற்றின் தொகுதி நின்றது. வெயி லொளி எந்தப் பொருள்மீது பட்டாலும் அந்தப் பொருள் அழகுடையதாகத் தோன்றுமென்று ஷெல்லி என்ற ஆங்கிலக் கவிராயன் சொல்லு கிருன்; எனக்கு எந்த நேரத்திலும் எந்தப் பொருள் களும் பார்க்க அழகுடையவனவாகத் தோன்று கின்றன.

ஆளுல் காலை வேளையில் மனிதக் கூட்டத்தில் கொஞ்சம் உற்சாகமும் சுறுசுறுப்பும் அதிகமாகக் காணப்படுவதால் அப்போது உலகம் மிகவும் சந்தோஷகரமான காட்சியுடையதாகிறது.

தோட்டத்துக்கு நடுவே ஒரு கிணறு. அத் தோட்டத்தில் சில அரளிப்பூச் செடிகள்; சில

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/328&oldid=605699" இலிருந்து மீள்விக்கப்பட்டது