பக்கம்:பாரதித் தமிழ்.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில குறிப்புகள் 347

முதலிய மந்திரிகள் ஆரம்பத்திலேயே ஸம்மதமளித்த தாகவும் சிலர் .ெ த ரி வி க் கி ரு ர் க ள். லண்டன் “டைம்ஸ்’ பத்திரிகை பிற்போக்குடையது. இன் றைக்கும் ஐர்லாந்து ஸ்வாதீனமடையும் விஷயத்தில் “டைம்ஸ்’ பத்திரிகைக்குக் கொஞ்ச்மேனும் அனு தாபம் கிடையாது ஐர்லாந்து தேசத்தார் தாங்கள் ஸ்தாபித்திருக்கும் குடியரசை எப்படியேனும் காப் பாற்ற வேண்டுமென்று பகீரதப் பிரயத்தனம் .ெ ச ய் து .ெ க ா ன் டு வருகையிலே, லண்டன் ‘டைம்ஸ்':-"காலக்கிரமத்தில் ஐர்லாந்து தேசத் தாரையும் சேர்த்துக்கொள்ளக் கூடியதான ஒராட்சி முறை ஐர்லாந்தில் விளைவதற்குரிய சட்ட திட்டங் களை ஏற்படுத்திவிட வேண்டும்” என்று ஆசீர்வாதம் பண்ணுகிறது. அந்த பாஷையைக் கவனித்தீர்களா? ஸ்வராஜ்ய விஷயத்தில் ஐர்லாந்துவ்ாளிகளுக்குள்ள தாகத்தின் வேகத்தையும் இப் பத்திரிகையின் ஆமை யெழுத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் வெகு விநோதமாகத் தோன்றும். இப்படிப்பட்ட லண்டன் ‘டைம்ஸ்’ கூடப் பழி வாங்குதல் என்ற பெயரை வைத்துக்கொண்டு ஆங்கிலேயத் துருப்புகள் ஐர் லாந்தில் நடத்தும் சட்டத்துக்கும் மனித நாகரிகத் துக்கும் விரோதமான கொடுஞ் செயல்களை மிக்வும் உக்ரமாகக் கண்டிக்கிறதென்றால் அக் கொடுஞ் செயல்கள் எத்தனை கொடுமையாக இருந்திருக்க வேண்டுமென்பதை நேசர்களே ஊகித்தறிந்து கொள்ளலாம். மேலும் இந்த விஷயத்தில் மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் முதலிய ஆங்கில மந்திரிகளின் உபந்யாஸங்கள் க டி த ங் க ள் முதலியவற்றைப் படித்துப் பார்க்கும்போது, நிலைமை கை கடந்து போய்விட்டதென்றும், இந்த ஐர்லாந்தின் ஸம்பந்த மாக இன்னதுதான் செய்ய வேண்டுமென்பதே ஆங்கில ராஜ தந்திரிகளுக்குத் தெரியவில்லை யென்றும் விளங்குகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/346&oldid=605727" இலிருந்து மீள்விக்கப்பட்டது