பக்கம்:பாரதித் தமிழ்.pdf/410

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டணத்துச் செய்திகள் 411

‘பிராமணரில்லாமல் மற்றவர் மந்திரிகளாக நியமிக்கப்பட்டது எனக்கு சந்தோஷந்தான். தாங் களே ஐரோப்பியக் கல்விக்குப் பிறப்புரிமை கொண்டோரென்றும் ஆதலால் ஐரோப்பியக் கல்வி யில் தாம் பெறக்கூடிய தேர்ச்சி ம்ற்ற ஜாதியாரால் எய்தவே முடியாதென்றும், ஆதலால் உயர்ந்த ஸ் ர் க் கார் ஸ்தானங்களெல்லாம் தங்களுக்கே கிடைக்குமென்றும் சென்னை மாகாணத்து பிரா மணரில் சிலர் மிகவும்கர்வம் பாராட்டி வருகிரு.ர்கள் அவர்களுடைய கர்வத்தைத் தீர்க்க இது நல்ல மருந்தாகி வந்தது. ஆனல் பிராமணரைத் தவிர வேறு ஜாதியாரை நியமிப்பதில் பிராமணத் துவே ஷம் ஒன்றையே பெருங் கடமையாகவும், பரம தர்மமாகவும், ஜன்ம லக்ஷயமாகவும் நினைக்கிறவர் களே விட்டு, இதர ஜாதியாராயினும் பிராமணத் துவேஷமில்லாதவர்களையே லார்ட் வில்லிங்டன் நியமித்திருக்க வேண்டும்” என்றார்.

“இதுவரை பிராமணரைப் பகைத்துக் கொண் டிருந்த போதிலும், இப்போது மந்திரி ஸ்தானம் கிடைத்ததிலிருந்தேனும், இ வ. ர் க ள் அதிகப் பொறுப்புணர்ச்சியும் விசால புத்தியும் உடையவர் களாய்த் தமது பெயரைக் காத்துக்கொள்ள வேணும். இயன்றவரை எல்லா வகுப்பினருள்ளும் பகடிபாதமில்லாமல் பொதுவாக நடந்து வர முயற்சி செய்வார்களென்று நம்புகிறேன்’ என்று மேற் கூறிய முதலியார் சொன்னர். இவர் சொல்லியதில் ஒருவித உண்மை யிருக்கக் கூடுமென்று என் புத்திக்குப் புலப்பட்டது. ஆனல் அதற்குள் நான் ட்ராம் வண்டியிலிருந்து இறங்குவதற்குக் காலமாய் விட்டபடியால் அந்த ரஸமான ஸம்பாஷணையைத் தொடர்ந்து கேட்க இயலவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/410&oldid=605828" இலிருந்து மீள்விக்கப்பட்டது