பக்கம்:பாரதித் தமிழ்.pdf/450

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூகோள மஹா யுத்தம 451

உள்நாட்டுக் குழப்பத்தை அடக்குவதற்கு வேறு நியாயமான வழி தெரியாமல், பிற நாடு களுடன் போர் தொடுத்து, அதினின்றும் ஸ்வ ஜனங்கள் ஏராளமாக மடிந்து தொலைவார்களாத லால் அங்ஙனம் உள்நாட்டுக் கலகம் தானே சாந்தி பெற்று விடுமென்று எதிர்பார்த்துப் பிற தேசங்க ளோடு போர் தொடங்குதல் சக்தியற்ற ராஜ தந்திரி களின் ஹீன மார்க்கங்களில் ஒன்று.

அதை முன்பு ருஷியா தேசத்துச் சக்ரவர்த்தி அனுஸ்ரித்தார். அவர் அதனல் எய்திய முடிவைக் கண்டும் புத்தி தெளியாமல், இன்று வேறு சில ஐரோப்பிய தேசங்களின் ராஜ தந்திரிகள் அந்த வழியை அனுஸ்ரிக்க எண்ணுகிறார்களென்று நினைக்க பலமான ஹேதுக்கள் இருக்கின்றன.

ஆனால், இனி ஐரோப்பாவில் அல்லது மேற்கு ஐரோப்பாவில், குறைந்த பகrம் இன்னும் 30 வருஷங்களுக்கு ஜனங்கள் யுத்தத்தின் பெயரையே ஸ்மரிக்க மாட்டார்களென்பது திண்ணம். சூடு கண்ட பூனே அடுப்பங்கரையை அணுகாது.

எனினும், ஐரோப்பிய தேசத்தார்களுக்குள்ளே ஏற்பட்டிருக்கும் விரோதங்களை மூடும் பொருட்டு ஐரோப்பா முழுவதையும், அல்லது வெள்ளை ஜாதி யார் அனைவரையும் ஆசியா, ஆபிரிகா ஜனங்களின் மீது போருக்கு விடலாமென்று சில மதி கேடர் யோசனை செய்கிரு.ர்கள்!

லண்டன் “டைம்ஸ்’ பத்திரிகை பொறுப்புத் தன்மையுடையதாகத் தன்னே மிகவும் கணித்துக கொள்ளுகிறது. இங்கிலாந்து தேசத்து மந்திரிகளைக் காட்டிலும் தனக்கு ப்ரிடிஷ் பரிபாலன விஷயத்தில் ஆயிரம் பங்கு அதிகப் பொறுப்புணர்ச்சி யிருப்பதாக நடிக்கிறது. அந்தப் பத்திரிகை (தனது 1921 ஜனவரி 15-ஆம் தேதிப் பதிப்பில்) மிஸ்டர் மக்ளுர் என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/450&oldid=605890" இலிருந்து மீள்விக்கப்பட்டது