பக்கம்:பாரதித் தமிழ்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியார் வாழ்க்கை வரலாறு 47


கட்டுரைகளாலும் ஒருவேளை கிடைத்திருக்கக்கூடிய பணமும் தவிர அவருக்கு வேறு வருவாய் இல்லை.

எங்கேனும், எப்படியேனும் பணம் கண்டுபிடித்து ஒரு நண்பன் பெயரால் நமக்கனுப்புக. தம்பி, உனக்கேனடா இது கடமை என்று தோன்றவில்லை?’ என்று 1915 ஜூலை 19-ல் பரலி நெல்லையப்பருக்கு அவர் எழுதியுள்ள கடித வாக்கியத்தில் பாரதியாருடைய பணமுடை மறைந்து நின்று மிக நன்றாகத் துன்பக் கோலத்தில் காட்சியளிக்கிறது.

ஆனால் பாரதியாரின் புதுச்சேரி வாழ்க்கை எல்லா அம்சங்களிலும் துன்பம் நிறைந்திருந்ததாக யாரும் நினைக்கக்கூடாது. அவருக்கு இரண்டு பெரிய மஹான்களின் தொடர்பும், நட்பும் அங்கே கிடைத்தன. கலியப்தம் 5011 பங்குனி 21-ந் தேதி (1911 ஏப்ரல் 3) ஸ்ரீ அரவிந்தகோஷ் புதுவைக்கு வந்தார். வந்த வகையில் ஐந்தாறு மாதகாலம் அவர் கோமுட்டித் தெருவில் ஸ்ரீமான் சங்கர செட்டியார் வீட்டில் தங்கியிருந்தார் (பால பாதி). ஸ்ரீ வ. வெ. சு. ஐயர் இவருக்குச் சற்று முன்பே வந்துசேர்ந்திருக்க வேண்டும். லண்டன் நகரத்தில் இந்திய விடுதியிலிருந்த மதன்லால் திங்கிரா என்னும் இளைஞன் 1909 ஜூலை 1-ஆம் தேதி கர்சான் வில்லி என்ற ஆங்கிலேயனைச் சுட்ட வீழ்த்தினான்ு; தானும் சுட்டுக்கொண்டு உயிர் துறந்தான். உட்னே இந்திய விடுதியிலிருந்த சவர்க்கார், வ. வெ. சு. ஐயர் முதலியோரைக் கைதுசெய்ய ஏற்பாடாயிற்று. சவர்க்கார் பிடிபட்டார். ஐயர் மாறுவேடம் பூண்டு தந்திரமாகப் பல விபத்துக்களைச் சமாளித்துக்கொண்டு புதுச்சேரி வந்தடைந்தார்.

தேசபக்தியின் காரணமாகவே மூவரும் புதுச்சேரியிலே தஞ்சம் புக நேரிட்டது. ஸ்ரீ அரவிந்தர், ஐயருடைய கூட்டுறவு பாரதியாருக்குப் பெரிதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/47&oldid=1539812" இலிருந்து மீள்விக்கப்பட்டது