பக்கம்:பாரதித் தமிழ்.pdf/484

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமைகள் 485

தனையோ மரக்கால் மனிதர் வந்து வைத்தியர்க ளிடம் சிகிச்சை கேட்கிரு.ர்களாம்!

“இஃதென்ன பைத்தியம்! தொடைமுதல் தாள் வரை நல்ல மரக்கட்டையோ அது போன்ற வேறு ஜட ஸாமானே! அதன் மரத்தாளில் நோயிருப் பதாம்! அதனைத் தொடைக்கு மேலுள்ள சரீரம் உணர்வதாம்! இஃதென்னே பேதைமை!” என்று பலர் வியப்புறலாம். ஒருவர் இருவர் சொன்னல் அவர்களைப் பித்தரென்று கூறித் திரஸ்காரம் புரிந்துவிடலாம். ஒரே மாதிரியாக அநேகர் வந்து சொல்லும் போது, பின்னும் அது பேதைமை தானென்பதை நாம் உணர்வோமெனினும் அதைக் குறித்து சாஸ்த்ர ஆராய்ச்சி யேற்பட இடமுண்டா யிற்று. மனுஷ்யனுடைய மனதில் எத்தனை விதமாக மூடக் கொள்கைகள் ஜனிக்கின்றன. எத்தனை மயக்கங்கள், எத்தனை மேர்ஹங்கள், எத்தனை மறதி கள்! நாகரிகமடைந்த, பயிற்சி பெற்ற அறிவுகளி லும் ஆயிரம் வகை விசித்திரமான மூட பக்திகளும் மஹாமூட பயங்களும் குடி புகுந்திருக்கின்றன! இஃது சாஸ்த்ர ஆராய்ச்சிக்குரிய விஷயமே.

ஐர்லார் துக்குக் கார்டினல் போர்ன் சொல்லும் புத்தி

‘கார்டினல்” என்பது ரோமன் கத்தோலிக்க குருக்களின் சிரேணியில் மிக உன்னத ஸ்தானத் தைக் குறிப்பிடுவது. கார்டினல் போர்ன் என்பவர் ஐரிஷ் பாதிரி வர்க்கத்தைச் சேர்ந்தவர். இவர் ஐர்லாந்து வாளிகளுக்கு விடுத்திருக்கும் பூரீமுக மொன்றில், ஸ்வதேசத்தின் மீதுள்ள ப்ரேமை மிகுதியால், தம் வசமின்றிச் சிலர் கடவுளின் விதி களுக்கும் கத்தோலிக்க மதத்திற்கும் விரோதமான ஸ்பைகளில் ஸம்பந்தப்பட்டிருப்பதாகத் தோன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/484&oldid=605942" இலிருந்து மீள்விக்கப்பட்டது