பக்கம்:பாரதியம்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவ்வப்போது கவியரசர் வெளியிட்ட அறிக்கைகள் எல்லாம் அவரின் இதயத்துடிப்பை ஆவலாதிகளைப் பிரதிபலிப்பதாகவே அமைந் துள்ளன. தேசத்திருத்தொண்டாகவும், தேசிய சேவையாகவுமே தம் நூல்கள் பிரசுரத்திட்டத்தைப் பற்றிப் பாரதியார் கருதினார். தம் நூல்கள் பிரசுரமானால், தமிழ்நாட்டின் தமிழ் இலக்கியத்தின் நிலை உயரும் என்றே எண்ணிப் பெருமைப்பட்டவர் பாரதியார். ஆனால்... ஆனால்... ஆனால்... மகாகவி பாரதி ஆசைஆசையாக மேற்கொண்ட நூல் வெளியீட்டு முயற்சிகளும் திட்டங்களும் தமிழ் மக்களின் போதிய ஆதரவின்மை காரணமாகச் செயலற்றுப் போய்விட்டன. மகாகவி பாரதியார் எழுதிக் குவித்தவையோ ஏராளம்... ஏராளம்... ஆனால், நூல்வடிவம் பெற்றவையோ விரல்விட்டு எண்ணிவிடும் அளவிலே இருந்தன. 1907ஆம் வருடத்திய சிறு பிரசுரத்தையும் சேர்த்துக் கணக்கிட்டால்கூட, 1920வரை வெளியான நூல்களின் எண்ணிக்கை இருபத்தொன்று மட்டுமேயாகும். ஆரம்ப காலத்தில் தேசியக் கவிஞராக அறிமுகமான பாரதியாரின் எழுத்துக்களைப் பிரசுரிக்க எவரும் முன்வரவில்லை. பாரதியின் எழுத்துக்களிலே தேசியமணம் கமழ்ந்தது மட்டுமின்றி, அன்னிய ஆட்சியைத் தாக்கும் போக்கும் காணப்பட்டன. தவிர, பிரசுரத் தொழிலை ஒரு வியாபாரமாக நடத்தும் முதலாளிகளும் தோன்றவில்லை. கைம்முதலைப் போட்டுத் தங்கள் நூல்களைப் பிரசுரம் செய்த ஆசிரியர்களே அந்தக் காலத்தில் காணப்பட்டனர். இவையும் பாரதியார் எழுத்துக்கள் நூல் வடிவம் பெறத் தடைகளாக அமைந்தன எனக் கொள்ளலாம். மற்றும் பாரதியாரையும், அவருடைய கவிதைத் திறனையும் அறிந்திருந்த பலரும், அவரின் தீவிர அரசியல் போக்குக் காரணமாக, அவருடைய எழுத்துக்கள் நூல் வடிவாக்கம் பெற உதவ முன்வரவில்லை எனவும் கருதலாம். அரசியலைப் பொறுத்தவரையில், பாரதியார் தீவிரவாதியாகத் தொழிற்பட்டவர்தான். ஆனால், நாளடைவில் அவருடைய கவிதை யழகில் சொக்கிப் போனவர்களிலே மிதவாதிகளும் இருக்கத்தான் செய்தனர். ராஜிய அபிப்பிராயங்களிலே வேறுபட்டு நின்ற மிதவாதத் தலைவர்களில் மிக முக்கியமானவர் என்று வருணிக் கப்பட்ட அரசியல் காரணமாகப் பல்வேறு சமயங்களில் பாரதி யாலேயே கடுமையாக விமர்சிக்கப்பட்டவருமான வி. கிருஷ்ண சாமிஜயர் தான் முதன் முதலாக 1907ல் 'ஸ்வதேச கீதங்கள்' என்று 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/10&oldid=817064" இலிருந்து மீள்விக்கப்பட்டது