பக்கம்:பாரதியம்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. பிரிட்டிஷ் ஆட்சிக்குட்பட்ட மலபார்ப் பகுதியில் அவர் பிறந்திருந்தாலும், கொச்சி சமஸ்தான மன்னராட்சியின் வட்டார் சூழ்நிலை வள்ளத்தோளின் பார்வையில் மாறுதல் விளைவதற்குத் தடுப்புச்சக்தியாக இருக்கலாம். o எட்டயபுரம் கொச்சியுடன் ஒப்பிடும்போது அதிகாரமும் உரிமைகளும் குறைந்த ஜமீன் மாத்திரமே. அது மாத்திரமல்லாமல் பதினாறு வயதிலேயே பாரதி எட்டயபுரச்சூழலைவிட்டு வெளியேறி விடுகின்றார். o 2. வள்ளத்தோளுக்கு சமஸ்கிருத, மலையாள மொழிகளைத் தவிர ஆங்கிலமோ வேறு மொழிகளோ சிறிதும் தெரியாது. ஆங்கிலம் கலாச்சார அடிமைத்தனத்துக்கு ஒரு கருவியாக இருந்தபோதிலும் உலக அறிவுக்கு ஒரு சாதனமாகத் திகழ்ந்ததை மறுப்பதற்கில்லை. பாரதி ஆங்கில ஆதிக்கத்தை வெறுத்தபோதிலும், அம்மொழியில் கல்விகற்றுப் புலமை பெற்றவன். அதனால் பாரதிக்கு உலக அறிவோடும் அதன் விளைவாகக் கிடைத்த சுதந்தர உணர்வோடும் பழகிக்கொள்ளக் கிடைத்த வாய்ப்பு வள்ளத்தோளுக்கு அமையவில்லை. 3. கட்டபொம்மன், மருது சகோதரர்கள் போன்ற வெள்ளையரை எதிர்த்த (1792 - 1801) ஒரு பரம்பரை பற்றியெழுந்த நாட்டுப்பாடல் இலக்கிய சரித்திரப் பின்னணி பாரதியின் நெல்லைச் சீமைக்கு நெருக்கமுடையது. இதன் மறைமுக பதிப்பு பாரதிக்கு இளமையிலேயே இருந்திருக்கக்கூடும். வேலுத்தம்பியின் வீரச் செயல்கள் அன்னிய ஆதிக்கத்தை எதிர்த்து நிகழ்ந்தன என்றாலும் தென்திருவிதாங்கூரில் துரத்தில் நடந்ததாலோ என்னவோ, மத்திய கேரளத்தைச் சேர்ந்த வள்ளத்தோளை இது பாதிக்கவில்லை. 4. வாழ்க்கை கொடுத்த வாய்ப்பாக வட இந்தியாவில் காசியில் பாரதி சில ஆண்டுகள் (1897 - 1901) வாழநேர்ந்தது. 1906, 1907-ஆம் ஆண்டுகளில் கல்கத்தா சூரத் காங்கிரசுகளுக்குச் சென்று வரவும் பாரதிக்கு சந்தர்ப்பங்கள் அமைந்தன. இவையெல்லாம் பாரதநாடு குறித்துச் சிந்திக்கும் விசால அறிவை அவருக்குத் தந்திருக்க வேண்டும். 98

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/100&oldid=817065" இலிருந்து மீள்விக்கப்பட்டது