பக்கம்:பாரதியம்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனால் ராமேஸ்வரத்துக்கு இளம் பிராயத்தில் யாத்திரை சென்று வந்தது தவிர - கேரளத்தின் எல்லையைக் கடந்துசெல்ல வள்ளத் தோளுக்கு வாய்ப்புகள் அதிகம் அமையவில்லை. 5.பத்தொன்பதாம் நூற்றாண்டின் சீத்திருத்தச் சிந்தனையாளர்களும், படைப்பாளிகளுமான இராமலிங்க சுவாமிகள், வேதநாயகம் பிள்ளை, கோபால கிருஷ்ண பாரதி, சுந்தரம்பிள்ளை போன்ற முன்னோடிகள் பாரதிக்கு அமைந்துபோனது அவருக்கு இன்னொரு வாய்ப்பு. இராமலிங்க சுவாமிகளைப்போல அக்காலகட்டத்தில் கேரள இலக்கிய வரலாற்றில் ஒரு வல்லமையுள்ள சீர்திருத்த சக்தி அமைந்திருக்கவில்லை. மேற்குறித்த காரணங்களோடு, அரசியல் இயக்க மையங்களில் ஒன்றாக அன்றைய இந்தியாவில் திகழ்ந்த சென்னையில் பாரதி வாழ நேரிட்டமையும் பாரதி வள்ளத்தோளைக் காட்டிலும் முன்னர் தேசியச் சிந்தனையாளனாக மாறியமைக்குக் காரணமாகச் சேர்த்துக்கொள்ளலாம். கவிஞனுக்குரிய தனித்துவப் பார்வையின் பங்கை இதனால் குறைத்து மதிப்பிட முடியாது. கால தாமதமாக வள்ளத்தோள் தேசிய நோக்குள்ள கவிதைகள் படைத்தார் என்றாலும்,எந்த மலையாளக் கவிஞரையும்விடதேசியப் போராட்டத்தையும், தேசிய உணர்வுகளையும் முழுமையாகவும் செழுமையாகவும் உருவாக்கிக் கொடுத்த பெருமை அவருக்குத்தான் உண்டு. சமுதாய வீச்சும் வீறும் படைத்த குமாரன் ஆசானும்கூட, விடுதலைப் போராட்ட வீர யுகத்துக்கு ஒரு தூரத்து சாட்சியாகவே காட்சி தருகின்றார். சங்கர குரூப், குமாரன் ஆசான், சங்கம்புழ முதலியாரையும் விட இத்துறையில் வள்ளத்தோள்முழுமையானகவி என்று இ.எம்.எஸ். நம்பூதிரிப்பாடு கருதுவது மிகவும் பொருத்தமான உண்மையே ஆகும்." பாரதி - வள்ளத்தோள்கவிதைகளில் தேசியப்பார்வையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது சில புதிய உண்மைகளைக் காண முடிகிறது. தொடக்க காலத்தில் இரண்டு கவிஞர்களுமே பிரிட்டிஷ் அரசர்களை வாழ்த்திப் பாடியிருக்கிறார்கள். 1901-ல் ஏழாம் எட்வர்டு மன்னரின் மகுடாபிஷேகத்தின்போது வள்ளத்தோள்'பாரதசக்ரவர்த்தி பஞ்சகம்’

  • E.M.S. Namboodiripad - Vallathol krithigalum desiya Prasthanevum, P.189 - Wallathol Commemmoration Volume, P. Cheruthuruthi 1965.

99

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/101&oldid=817066" இலிருந்து மீள்விக்கப்பட்டது