பக்கம்:பாரதியம்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னும் வாழ்த்துக் கவிதைகளைப் பாடியுள்ளார். 1905-ல் இந்தியாவுக்கு வருகை தந்த வேல்ஸ் இளவரசருக்கு வரவேற்புக் கவிதை எழுதியுள்ளார் பாரதி. இந்தக் கவிதைகளை இக்கவிஞர்கள் எழுதியமைக்கான காரணங்கள் எவையாயினும் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வுக்கு முரண்பட்டதாக இவை தோன்றுகின்றன. ஆனால் தேசிய உணர்வு முழுமையாக அரும்பாதநிலை வள்ளத்தோளிடமும், தேசியக் கவிதைகள் எழுதத் தொடங்கியிருந்தும் பத்திரிகை அலுவலில் சேர்ந்த தொடக்ககால நிர்ப்பந்தச் சூழ்நிலை பாரதி யிடமும் அப்போது இருந்ததென்று ஊகிக்கலாம். இரண்டு கவிஞர்களுடைய ஆரம்பநிலைத் தேசியக் கவிதைகளில் பாரத நாட்டையோ, கேரள நாட்டையோ அன்னை வடிவில் போற்றும் பண்பும் இயற்கை அழகுகளை விவரித்து மகிழும் இயல்பும் காணப்படுகின்றன. 'பாரத நாடு’ எங்கள் நாடு. ஆகிய கவிதைகளில் பாரதி பங்கிம் சந்திரரின் வந்தே மாதர கீதத்தின் கருத்துக்களைப் பிரதிபலிக்கின்றார்: பங்கிம் சந்திரரின் வந்தே மாரதம் கவிதையை இருமுறை பாரதி மொழிபெயர்த்திருக்கின்றார். இதே விதமான கவிதைப் போக்குக்கு வள்ளத்தோளின் மாத்ரு வந்தனம் சரியான எடுத்துக்காட்டாகும். நாட்டையும் மொழியையும் தாயாக வழிபட்டுப்போற்றும் இந்தப் போக்கை இந்திய மொழிகள் அனைத்திலும் சந்திக்கின்றோம். ஹிருதய குமாரி என்னும் மலையாள எழுத்தாளர் கருத்துப்படி, வள்ளத்தோளின் தேசபக்தி அரசியல் ரீதியானது அல்ல; சமய ரீதியான கருத்தமைப்புடையது. பல கவிதைகளில் (நம்முடெமறுபடி, கொச்சு சீத, மலையாளத்தின்ரெ தல) வள்ளத்தோள் பழம் பெருமைகளில் திளைப்பவராகவும், பழம்பெரும் முனிவர்கள் புராண நாயகர்களை உபாசிப்பவராகவும், உபநிஷத்துக்களிலும் கீதையிலும் மூழ்கிய வராகவும், கர்ணன், சிபி முதலிய பாத்திரங்களின் பெருமைகளை ஓயாது உரைப்பவராகவும் காட்சிதருகின்றார். இதே இயல்பை பாரதி கவிதைகளிலும் சந்திக்கிறோம். 'பாரதமாதா”, “எங்கள் தாய்' 'பாரததேவி திருத்தசாங்கம்’, ‘வெறிகொண்ட தாய் முதலிய கவிதைகளில் இராமன், அர்ச்சுனன், கர்ணன், கிருஷ்ணன் முதலிய

  • B.Hrdyakumari - Vallathol-P. 19. Sahitya Akademi, New Delhi 1974.

100

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/102&oldid=817067" இலிருந்து மீள்விக்கப்பட்டது