பக்கம்:பாரதியம்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புராணநாயகர்களின் புகழ் பாடுவதுடன் அவர்கள் செயல்களெல்லாம் பாரதமாதாவின் செயல்களென வியந்துரைக்கவும் செய்கின்றார்." ஆனால் பாரதியிடம் மற்றொரு தன்மையும் காணப்படுகின்றது. வள்ளத்தோள் முழுமையாக சமய உணர்வில் திளைப்பவராகத் தோன்றுகையில் பாரதிக்கு பழமை, புதுமை புனைய ஒரு வழிகாட்டியாகவே தெரிகின்றது - வெறும் பழமை வழிபாட்டை பாரதி கடிந்து பேசுகின்ற இடங்களும் உண்டு. “சென்றதினி மீளாது மூடரே நீர் எப்போதும் சென்றதையே சிந்தைசெய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்.” என்று தெளிவாகப் பேசுவதால் பழமையை நோக்கி மீள் போக்கை அவர் ஆதரிக்கவில்லை என்பதை அறியலாம். தேசியத் தலைவர்களைக் குறித்தும் இருகவிஞர்களும் பாடியுள்ளனர். தாதாபாய் நெளரோஜி, லாலா லஜபதிராய், பூபேந்திரர் வ.உ.சி. பால கங்காதர திலகர், மகாத்மா காந்தி முதலிய தலைவர்களைப் புகழ்ந்து பாடியுள்ளார் பாரதி. எனினும் அவரது அன்புக்கும் ஆராதனைக்கும் வணக்கத்துக்கும் உரிய தலைவராக திலகரையே கொண்டாடுகின்றார். திலகரின் தீவிரவாத அரசியலைப் பிரசாரம் செய்வதிலும் பின்பற்றுவதிலும் பாரதி மிக ஆவேசமான தொண்டராகத் திகழ்ந்தார். “மகாத்மாகாந்தி பஞ்சகம்’ என்ற கவிதையில் வளர்ந்து வரும் காந்தியத் தலைமையையும் ஒத்துழையாமை இயக்கத்தையும் பாரதி வாழ்த்தி வரவேற்கின்றார். எனினும் திலகரின் மறைவும் தீவிரவாத அரசியலுக்கு நேர்ந்த தோல்விகளும் இதற்குக் காரணமாகலாம். காந்தியின் சமூக இயல் கருத்துக்கள் அனைத்தையும் பாரதி ஒப்புக் கொண்டதாகவும் தெரியவில்லை. கட்டுரைகளில் பூரீமான் காந்தி விதவைகளைப் பற்றிக் கொண்டிருக்கும் கருத்தை பாரதி விமர்சிக் கின்றார். ஆனால் வள்ளத்தோள், தாதாபாய் நெளரோஜி போன்ற 5 பாரதியார் கவிதைகள் - ப. 142, 143, 145, 151, வானவில் பிரசுரம், சென்னை, 1981. 6 பாரதியார் கவிதைகள் ப. 118. 101

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/103&oldid=817068" இலிருந்து மீள்விக்கப்பட்டது