பக்கம்:பாரதியம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைவர்கள் ஒரிருவரைப் பாடியிருந்தாலும் தன் கவியாற்றல் அனைத்தையும் காணிக்கையாக்கியது மகாத்மாவின் காலடிகளில் தான். 'என்ரெகுருநாதன் (1922) என்ற அவரது கவிதை இதற்கு எடுத்துக்காட்டு. அனைத்துக் கேரள இலக்கிய விமர்சகர் களும் மகாத்மா காந்தியே வள்ளத்தோளின் தேசிய உணர்வின் மையம் என்பதை ஒப்புக்கொள்கின்றனர். வைக்கம் சத்யாக்கிரக வேளையில் (1921) மகாத்மா காந்தியை நேரில் சந்தித்ததும் எழுதிய பாப மோசனம் என்ற கவிதையில் காந்திஜி கடவுளாகவே அவருக்கு தரிசனம் தருவதை விவரிக்கின்றார். மேலும் காந்தியடிகளின் நிர்மாணத் திட்டங்களான கதர், சர்க்கா, சத்யாக்கிரகம் ஆகியவை களைப் பல கவிதைகளில் விதந்தெடுத்துப் பேசுகின்றார். இவற்றிலிருந்து நாம் தெரிந்து கொள்வது காந்தியுகம் தொடங்கும் போது மரணமடைந்து விட்ட பாரதி தேசியப் போராட்டத்தின் தீவிரவாத அரசியலின் கவியாகவும் (1906 - 1918), வள்ளத்தோள் அதன்பின் தொடர்ச்சியான காந்திய காலக் கவியாகவும் (1918 முதல்)திகழ்கின்றார் என்பதுதான். தேசிய உணர்வைப் படம் பிடிக்க புராணங்களை உருவகங்களாக்கி உரைக்கும் பண்பும் இருவரிடமும் காணப்படுகின்றது. 'அக்தி தோமம் பாஞ்சாலி சபதம் ஆகிய பாரதி படைப்புக்கள் இதற்கு உதாரணங்கள். பாஞ்சாலி பாரத அன்னைக்குக் குறியீடாவதைப் பார்க்கிறோம். வள்ளத்தோளும் இந்த உத்தியை, கர்ம பூமியுடெ பிஞ்சு கால், என்ற கவிதையில் கையாளுகின்றார். காளிங்கன் மீது நடமாடும் கண்ணனின் பாதம் தேசத்தின் சுதந்தர உள்ளமாகக் காட்டி வள்ளத்தோள்வெற்றியடைகின்றார். எனினும் புராணக் கற்பனைகள் வள்ளத்தோளுக்கு இந்தப் பழம்பெரும் தேசத்து மாமனிதர்களின் தட்டிக் கேட்கக் கூடாத அறிவுக் களஞ்சியமாகத் தோன்றுகின்றன." ஆனால் பாரதிக்கு, பன்னரும் உபநிட நூலும், வேதரிவிகளின் கவிதைகளும், புராணங்களும் மரியாதைக்குரியனவென்றாலம் ஒரு வித்தியாசமான கண்ணோட்டமும் இருந்தது. வேதங்களென்று புவியோர் சொல்லும் வெறுங் கதைத் திரள் என்றும், 7 பாரதியார் கவிதைகள் - ப. 57, 490. 8 Selected poems: Vallathol - P. 57 - Kerala Sahitya Akademi. Trichur 1978. 102

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/104&oldid=817069" இலிருந்து மீள்விக்கப்பட்டது