பக்கம்:பாரதியம்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'கடலினைத் தாண்டும் குரங்கும் - வெங் கனலிற் பிறந்த்தோர் செவ்விதழ்ப் பெண்ணும் வடமலை தாழ்ந்ததனாலே - தெற்கில் வந்து சமன்செய் குட்டை முனியும்’ கதையென்று கண்டோம் என்றும் கூறும் வரலாற்றுப் பார்வை பாரதியிடமிருந்தது என்பது வள்ளத்தோளிடமிருந்து மாறுபடும் நிலையாகும். இந்த மாறுபாடான போக்குக்கு தேசியக் கொடியைக் குறித்து இரு கவிஞர்களும் பாடியுள்ள கவிதைகள் எடுத்துக்காட்டுக்களாகும். ராட்டை வரைந்த மூவர்ணக் கொடியை வள்ளத்தோள் பாடியிருக்க, அக்கொடி தோன்றும் முன்னர் தேசபக்தர்கள் சிந்தனையிலிருந்ததும், பெருமளவு வழக்கத்துக்கு வராததுமான ஒரு கொடியைக் கற்பனையில் பாடுகின்றார் பாரதி. வள்ளத்தோளின், போரா போரா (போதாது, போதாது)" என்ற கவிதையில் கொடி வாசுதேவன் மார்பிலணிந்த மாலை யென்றும், ராட்டை, சுதர்சன சக்கரம்’ என்றும் வர்ணிக்கப்படுகிறது." பாரதியின்'மாதாவின் துவஜம் என். கவிதையில் இந்த சமயப் பாங்கு காணப்படவில்லை. அதே சமய கொடியின் கீழ் பாரத நாட்டின் பல்வேறு தேசிய இன மக்களும் அண வகுத்து நிற்கும் காட்சியே சிறப்பிடம் பெறுகிறது. வங்கம், கேரளம், மராட்டியம், ரஜபுத்தானம், தெலுங்கு தேசம், கன்னட நாடு என விரியும் பாரத பூமியின் புதல்வர்களின் வீரதரிசனமாகிறது." தேசிய இயக்கம் இரு கூறுகள் கொண்டது. ஒன்று பழமையை நோக்கிய மீள்பார்வை. மற்றொன்று சமகாலச் சீரழிவுதுடைக்கும் சீர் 9 பாரதியார் கவிதைகள் - ப. 678 வானவில் பிரசுரம் சென்னை 1981. "Selected poems: Wallathol, Higher & Higher, P.89. Kerala Sahitya Akademi, Trichur, 1978. li மேற்படி 12 பாரதியார் கவிதைகள் - ப. 154 வானவில் பிரசுரம், சென்னை 1981. 103

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/105&oldid=817070" இலிருந்து மீள்விக்கப்பட்டது